கேரட் கேக்

தேதி: February 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. மைதா மாவு - 1 1/2 கப்
2. துருவிய கேரட் - 3 கப்
3. பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
4. உப்பு - 1/2 தேக்கரண்டி
5. சர்க்கரை - 1 1/2 கப்
6. எண்ணெய் - 1 கப்
7. முட்டை - 3
8. வால்னட் (அ) முந்திரி - 1 கப்
9. ஜாதிக்காய் பொடி - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
10. பட்டை பொடி - 1 தேக்கரண்டி (விரும்பினால்)


 

முட்டையை அடித்து வைக்கவும்.
முந்திரி (அ) வால்னட்டை நொறுக்கி வைக்கவும்.
முதலில் மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, சர்க்கரை, பொடி வகை எல்லாம் ஒன்றாக நல்லா கலந்து வைக்கவும்.
இதில் எண்ணெய், முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பொடித்த வால்னட் (அ) முந்திரி, கேரட் துருவல் சேர்த்து கலக்கவும்.
கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி விட்டு, இந்த கலவை ஊற்றி ஒவனில் (350 'ல் முற்சூடு செய்து) வைத்து பேக் செய்யவும் (அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை எடுக்கும்).


மேலும் சில குறிப்புகள்


Comments

i am not having oven or microwave in my home.but i am interested to do cake,how can i do this?please help me friends. why nobody is replying for this shall i do it in cooker itself..............

அன்பு காயதிரி, இதுவரை நான் குக்கரில் செய்ததில்லை. எனக்கு தெரியல. மன்னியுங்கள். வெண்ணை இல்லாத கேக் எல்லாம் சாதாரனமா குக்கரில் தண்ணி வைத்து வேறு பாத்திரத்தில் கலவை போட்டு உள்ளே வைத்து தட்டு போல் போட்டு மூடி செய்யலாம் என ஒரு தோழி சொல்வார். சரியா தெரியல. மன்றத்தில் கேளுங்க தோழிகள் உதவுவாங்க. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks for replying

my mom followed this method....add clean beach sand in the pressure cooker heat the pressure cooker when sand is really hot ,pour batter in aluminium pan provided fr the cooker,place the pan on the hotmud and close the cooker n cook....