மைதா இனிப்பு தோசை

தேதி: February 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 1/2 கப்
பால் - 1/2 கப்
முட்டை - ஒன்று
உப்பு - ஒரு பின்ச்
தேங்காய் துருவல் - 1/2 கப்
சோம்பு - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2
நெய் - தோசைக்கான அளவு
சர்க்கரை - 1/4 கப்


 

நெய் சர்க்கரை தவிர மற்ற பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
தோசை மாவை விட சற்று இளகியதாக தேவைக்கு பால் சேர்த்து கரைக்கவும்.
அதனை மெல்லிய தோசைகளாக ஊற்றி நெய் தெளித்து சுடவும். உள்ளே சர்க்கரை தூவி மடக்கி பரிமாறவும்.


தோசையில் தேங்காய் துருவல், சர்க்கரை, பாசிப்பருப்பு வேக வைத்தது கலந்தும் சுருட்டி பரிமாறலாம். குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்