Wii Fit - Share your opinion here, please

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் ஒரு புது டாப்பிக் ஆரம்பிக்கிறேன். ரொம்ப நாளாவே இதுபற்றி கேட்க வேண்டுமென்று இருந்தேன். இன்றுதான் முடிகிறது.
Wii Fit – யாராவது வைத்திருக்கிறீர்களா? எந்த அளவுக்கு யூஸ்புல்?. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? என்பவற்றை இங்கே வந்து ஷேர் பண்ணிக்கொள்ளுங்கள். எனக்கு வாங்கலாமா என்று ஒரு யோசனை. நான் கேள்விப்பட்ட வகையில் நன்றாகத்தான் இருக்கும்போல் தெரிகிறது. ஆனாலும் பெரிய செலவாக இருப்பதால் நன்றாக யோசித்து முடிவு பண்ண நினைக்கிறேன். நம் அறுசுவை தோழிகளிடமும் கருத்து கேட்கலாமே என்று இதை பதிவு செய்கிறேன்.

அன்புடன்,
சுஸ்ரீ

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் ஒரு புது டாப்பிக் ஆரம்பிக்கிறேன். ரொம்ப நாளாவே இதுபற்றி கேட்க வேண்டுமென்று இருந்தேன். இன்றுதான் முடிகிறது.
Wii Fit – யாராவது வைத்திருக்கிறீர்களா? எந்த அளவுக்கு யூஸ்புல்?. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? என்பவற்றை இங்கே வந்து ஷேர் பண்ணிக்கொள்ளுங்கள். எனக்கு வாங்கலாமா என்று ஒரு யோசனை. நான் கேள்விப்பட்ட வகையில் நன்றாகத்தான் இருக்கும்போல் தெரிகிறது. ஆனாலும் பெரிய செலவாக இருப்பதால் நன்றாக யோசித்து முடிவு பண்ண நினைக்கிறேன். நம் அறுசுவை தோழிகளிடமும் கருத்து கேட்கலாமே என்று இதை பதிவு செய்கிறேன், எதிர்பார்ப்புடன்.

அன்புடன்,
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது ரசியா அக்கா வீட்டில இருக்கு ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அவங்க வந்தா பதில் சொல்லுவாங்கன்னு நினக்கிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அட இலா, நான் த்ரெட் போட்டு சென்ற கொஞ்ச நேரத்திலேயே நீங்க வந்து பதில் பதிவு போட்டிருக்கிங்க!! .. இலான்னா இலாதான்! : ) (பின்ன யார் இல்லைன்னு சொன்னதுன்னு நீங்க கேட்பது தெரிகிறது! :-)
ஸாரி, இப்பதான் உங்க பதில் பார்த்தேன். தேங்ஸ்!.

ரசியா அக்கா எங்க இருக்கீங்க?! முடிந்தால் கொஞ்சம் வந்து எனக்கு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க, ப்ளீஸ்!

வேற யாராவது இது பற்றி தெரிந்தவங்களும் சொல்லுங்கள்.
ரசியா அக்காவை பார்த்தாலும் நான் அவங்களை தேடறதை சொல்லிடுங்க! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஆமாம்பா நானும் வாங்கனும் நினைக்கிறேன்,ஆனால் இத பத்தி சரியா புரியாமல் தெரியாமல் வாங்க மனசில்ல,யூஸ் பண்றவங்க யாராவது சொன்னால் நல்லா இருக்கும்,.என் சார்பாகவும் ரசியா மேடம் கிட்ட இன்ஃபார்ம் பண்ணுங்க..நானும் பார்த்துட்டு இருக்கேன் யாராவது பதில் போடுவாங்களானு..சுஸ்ரீ,இலா தேங்ஸ்பா..

என்னப்பா?!! யாரும் இல்லையா? இதுபத்தி உங்க கருத்து, அனுபவம் சொல்ல? ரசியா அக்கா எங்கே இருக்கீங்க?

சரி சாந்தோ (தாமரை), இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். அப்புறம் உங்க பையன் சந்தோஷ் நலமா?!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் சுஸ்ரீ

நலம் தானே!!! நீங்க 2 வருஷம் முன்னாடி ஆரம்பிச்ச டாபிக் இது!!!! அனேகமா நீங்க wii Fit வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சுருப்பீங்கன்னு நினைக்கிறேன்.... நாங்க ஒரு 4 மாதம் முன்னாடி தான் வாங்கினோம்.... முதலில் கொஞ்ச நாள் இதில் டென்னிஸ் விளையாடினேன், அப்புறம் wii Fit-la "YOUR SHAPE”னு ஒரு சிடி வாங்கி இப்ப அது தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன், தினமும் குறைந்தது 30 நிமிஷம் வொர்க் அவுட் பண்ணுவேன்.... 500 கலோரிஸ் வரை பர்ன் ஆகும்... நல்லா வேர்க்கும்.. அதற்கு மேல் எடை குறைந்ததா, வயிறு குறைந்ததா-ன்னு என்னால் கண்டுபிடிக்க முடியல....ஆனால் பண்றதுக்கு நல்லா இண்ட்ரெஸ்டா இருக்கு, நம்ம கூடவே ஒருத்தர் பண்ற ஃபீலிங் கிடைக்குது.... மே பி நான் சொல்வது எல்லாம் உங்களுக்கு பழகி போன விஷயமாக கூட இருக்கலாம், இருந்தாலும் என் அனுபவத்தை ஷேர் பண்ணிக்கலாம்னு தான் இதை தூசி தட்டி எடுத்திருக்கேன்.... நீங்க யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா? பயன்பாடு எப்படி இருக்கு?

சாந்தோ!!! நீங்களும் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு எந்த அளவு பயன்படுது?

மற்ற தோழிகளும் யாராவது தற்சமயம் யூஸ் பண்ணிட்டு இருந்தால் நீங்களும் உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்களேன்!!!! என்ன தான் நான் யூஸ் பண்ணினாலும் மற்ற தோழிகள் யாராவது உங்க அனுபவத்தை சொன்னா எனக்கும் கொஞ்சம் உபயோகமா இருக்கும்.

அனேக அன்புடன்
ஜெயந்தி

ஹலோ ஜெயந்தி,

நான் நல்லா இருக்கேன், நீங்க நலமா?! இப்பதான் பார்க்கிறேன் இந்த த்ரெட்டை, உங்க கேள்வியோட!

ஆமாம், நாங்க‌ அந்த வருஷமே Wii வாங்கினோம். வீ ஃபிட் & வீ கேம்ஸ் எல்லாம் வாங்கின புதிதில் ரொம்ப ஆர்வமா நானும் செய்தேன், மெயினா நான் செய்யறது, ஹூலா ஹூப்ஸ், எரோபிக்ஸ் ஸ்டெப்ஸ், பேலன்ஸ் கேம்ஸ் கொஞ்சம், அப்புறம் டென்னிஸ், பவுலிங் இப்படி எல்லாம்! இப்ப பசங்க நல்லா விளையாடறாங்க! :) எனக்குதான் நேரமே இல்லாமல், உபயோகப்படுத்தியே ரொம்ப நாளாச்சு. ஆனா பரவாயில்லை, சரியான நேரத்தில்தான் நீங்க எனக்கு இந்த த்ரெட்டை எடுத்து நியாபகம் படித்திருக்கிங்க! :) வீக்கென்ட் கொஞ்சம் யூஸ் பண்ணிடறேன்!.

அப்புறம் நீங்க சொன்ன 'Your Shape' பத்தி எனக்கு தெரியலை ஜெயந்தி. என்னிடம் இல்லை. நீங்க ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதை பார்த்தா, ட்ரை பண்ணலாம் போல இருக்கே!

ஓகே, வேற யாராவது தோழிகள் இதுபத்தி ஏதாவது சொல்றாங்களான்னு பார்ப்போம். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் சுஸ்ரீ!!!

எப்படி இருக்கீங்க? சாரிப்பா ரொம்ப லேட் ஆன ரிப்ளைக்கு.... எடை குறைக்கும் முயற்சி எந்த அளவு போயிட்டு இருக்கு?

அப்ப, நீங்களும் Wii Fit யூஸ் பண்றீங்களா? நீங்க பேலன்ஸ் போர்டு சேர்த்து வாங்கிட்டீங்களா? அதுல தானே ஹூலா ஹூப்ஸ் எல்லாம் பண்ண முடியும்.. ஆனா அது கொஞ்சம் விலை அதிகன்றதால நாங்க வாங்கலை... நான் சொல்ற சிடி $20 தான்.... ப்ட், விலயை விட பயன் அதிகமாவே இருக்கு... ஆமாம் நான் ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி அதில் பண்ணினால் நம்ம கூடவே ஒருத்தர் பண்ற மாதிரி இருக்கும்.. நம்ம தவறுகளையும் சுட்டி காட்டி சரி பண்ணிட்டே இருக்கும்.... நம்ம உடல் அமைப்பை ஸ்கேன் பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி பயிற்சி செய்ய சொல்லும்.. மொத்தத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நீங்களும் வாங்கிட்டு சொல்லுங்க....

அனேக அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்