வேர்க்கடலை பக்கோடா

தேதி: February 19, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேர்க்கடலை பருப்பு (வறுக்காதது) - இரண்டு கப்
கடலை மாவு - ஒன்னேகால் கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் தூள் - இரண்டரை தேக்கரண்டி
இஞ்சி - பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

வேர்க்கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி -பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிசறி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த வேர்கடலை பக்கோடா நேற்று மாலை செய்தேன் சுவை சூப்பரா இருந்தது. ஒருசிலது மட்டும் க்ரிஸ்ப்பியா இல்லை என்ன தப்பு பண்ணுனேன் தெரியலப்பா. ஆனால் சூப்பர் டேஸ்ட்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மைதிலி வேர்கடலை பக்கோடா செய்தேன் நல்லா இருந்தது,எனக்குகூட கிரிஸ்ப்பியா வரல என்னானு தெரியல.டேஸ்ட் நல்லா இருந்தது நன்றி மைதிலி.
உங்க பசங்க நல்லா இருக்காங்களா.

ஹாய் தனி,
எப்படி இருக்கீங்க?வேர்கடலை பக்கோடா க்ரிஸ்ப்பியா வரலையா கொஞ்சம் அரிசி மாவு ரேத்துக்களம் அப்புறம் எண்ணையில் போடும்போது இந்த வேர்கடலை மாவு
கொஞ்ச கொஞ்சமாக உதிரி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவேண்டும்.
இது டிரிய் பண்ணிபார்ருங்க.பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி பா.

ஹாய் கவி,
எப்படி இருக்கீங்க?குழந்தைகள் நல்ல இருக்காங்க பா.கவி நிங்களும் இந்த மாதிரி பண்ணிபாருங்க பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி பா.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி அவர்களுக்கு, இக் குறிப்பை செய்தேன். எனக்கு க்ரிஸ்பியா வந்துச்சே:) பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி உங்களுக்கு.

வின்னி நலமா? பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்களா ரொம்ப சந்தோஷம் பா.
பினூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி! வேர்க்கடலை பக்கோடா சூப்பர்! நான் ஹாஸ்டலில் இருந்தப்போ சாப்பிட்டது, இப்போதான் மீண்டும் சாப்பிட்டேன். தேங்ஸ்பா! சூடாக இருக்கும்போதைவிட சற்று ஆறியவுடன்தான் கிரிஸ்பியாக இருந்தது. கடலை மாவின் அளவு சற்று அதிகமோ? ஆனா, நல்ல டேஸ்ட்!