பனீர் போண்டா

தேதி: February 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
சோம்பு - 1 சிட்டிகை
கடலைமாவு - 1 1/2 கப்
அரிசிமாவு - 1/4 கப்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு


 

பனீரை சிறுதுண்டுகளாக நறுக்கவும். எண்ணெயில் பொரித்து நீரில் ஊற வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
இத்துடன் கரம் மசாலா, நறுக்கிய மல்லி, உப்பு, வறுத்துபொடித்த சோம்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டைகள் செய்யவும்.
கடலைமாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து பனீர் உருண்டைகளை மாவில் முக்கி பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
சூடாக மல்லி சட்னியுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று பனீர் போண்டா செய்தேன் சூப்பர்...டேஸ்ட் போங்க... உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.
மைதிலி

Mb

பனீர் போண்டா சூப்பராக அமைந்ததற்கு நன்றி.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website