நட்ஸ் கீர்

தேதி: February 20, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரிப்பருப்பு - 20
பாதாம் பருப்பு - 20
பிஸ்தா - 10
கன்டென்ஸ்டு மில்க் - 1 டின்
பால் - 1/2 லிட்டர்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
கிஸ்மிஸ்பழம் - 10


 

பாதாமை முந்தினநாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் தோலுரித்து துருவி வைக்கவும்.
பிஸ்தா, முந்திரிப்பருப்பு இவற்றை 1 டீஸ்பூன் நெய்யில் தனித்தனியாக வறுத்து பொடித்து வைக்கவும்.
துருவிய பருப்புகளைச்சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 2 ஸ்பூன் ஆறிய பாலுடன் மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும் .
இந்த பொடிகலவையை 1/2 லிட்டர் சூடான பாலில் கலந்து, விழுது வேகும் வரை கொதிக்க விடவும்
குங்குமப்பூவை 1 டீஸ்பூன் பாலில் கரைத்து சேர்க்கவும். ஒரு கொதி விட்டு இறக்கிவைக்கவும். மற்றும் 1 டீஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ் பழத்தை வறுத்துப்போடவும்.
பிறகு கலவை ஆறியப்பின் கன்டென்ஸ்டு மில்க்கைக் கலக்கவும். ஏலக்காய்த்தூளை தூவி ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்