காய்கறி குருமா

தேதி: February 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 1
பீன்ஸ் - 2
உருளைக் கிழங்கு - 1/2
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தனியா தூள் - ஒன்றரை டீஸ்பூன்
சாம்பார் தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - தேவையான அளவு
பட்டை - 2
லவங்கம் - 4
சோம்பு - சிறிது
பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சில இலைகள்
புதினா - சில இலைகள்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

மேலே உள்ள காய்கறி, பெரிய வெங்காயம் நம் விருப்பம் போல் நறுக்கி கொள்ளவும்.
தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், கறிவேப்பிலை, புதினா, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் மிளகாய் பொடி, தனியா பொடி, சாம்பார் பொடி சேர்த்து பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
உப்பு தேவையான அளவு சேர்க்கவும். அதில் அரைத்து வைத்து உள்ள தேங்காய் துருவல் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
விரும்பினால் இஞ்சி, பூண்டு கலவை சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்