தடியங்காய் சாம்பார்

தேதி: February 20, 2009

பரிமாறும் அளவு: 4- 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பருப்பு - 100 கிராம்
தடியங்காய் - 200 கிராம்
தக்காளி - 1 பெரியது
வெங்காயம் - பாதி
மிளகாய் - 2
சாம்பார் பொடி - 1 அல்லது 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரைஸ்பூன்
சீரகப்பொடி - கால்ஸ்பூன்
பெருங்காயப்பொடி - பின்ச்
பூண்டு - 2 பல்
தாளிக்க :
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு- அரைஸ்பூன்
வெங்காயம் - பாதி
வற்றல் - 2
கறிவேப்பிலை,மல்லி இலை - சிறிது


 

முதலில் பருப்பை சிறிது ஊறவைத்து மஞ்சள் பொடி, சீரகப்பொடி, பூண்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெந்த பின்பு பருப்பை எடுத்து விட்டு அதே குக்கரில் தடியங்காய். கட் செய்த தக்காளி, வெங்காயம், சாம்பார் பொடி, மிளகாய், உப்பு போட்டு ஒரு விசில் வைக்கவும்.
பின்பு காய் வெந்தபின்பு வேகவைத்த பருப்பை போட்டு கொதிவரவும் மல்லி இலை போடவும்.
பின்பு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, வற்றல், வெங்காயம், காயப்பொடி கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
சுவையான தடியங்காய் சாம்பார் ரெடி. ப்ளைன் சாதத்துடன், ஃப்ரை அயிட்டம் சைட் டிஷ் வைத்து பரிமாறவும்.


குழந்தைகள் தடியங்காய் விரும்பி சாப்பிடுவார்கள், கோடை காலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள காய் சாப்பிடுவது நல்லது. இதே போல் சுரைக்காய் சேர்த்தும் செய்யலாம். இந்த சாம்பாருக்கு புளி விடத் தேவை இல்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

தடியங்காய்ன்னா என்ன காய்??

pumpkin என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேனு இததான் நானும் கேட்கலாம்னு உள்ள வந்தேன் அதுக்குள்ல நீங்க கேட்டு ஆசியாமேடம் பதிலும் சொல்லிட்டாங்க..நன்றிபா 2பேருக்கும்..

தடியங்கா சாம்பார் சூப்பரா இருந்தது. புளி விடாததால் நைட் இட்லிக்கும் சேர்த்து வச்சிட்டேன். உங்க சமையலில் டேஸ்ட்க்கு பஞ்சம் இருக்காது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக்க நன்றி தனிஷா.தடியங்காய் சாப்பிட நல்ல இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வெள்ளை பூசனிகாய் தானா?

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆமாம் இலா,வெள்ளை பூசணிதான்,உங்களுக்கு இலங்கையா இந்தியாவா?ரொம்ப நாளாய் நினைத்து இன்று கேட்டாச்சு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா எனக்கு யாது ஊரே யாவரும் கேளிர் 5வது- 12வது வரை தூத்துக்குடி அப்புறம் கோவை அப்புறம் சென்னை அப்புறம் பெங்களூரு அப்புறம் மறுபடியும் சென்னை இப்ப இங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனக்கு தூதுக்குடியும்,கோவையும் பரிச்சயம் தான்,தெர்மல் பவர் ஸ்டேஷனில் என் கணவர் வேலை செய்தார்,கேம்ப் 2 வில் 4 வருடம் இருந்தோம்.கோவை என் கல்லூரி படிப்பு,4 வருடம் TNAU வாழ்க்கை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தடியங்காய் என்றவுடன் எதே நான் – வெஜ் …என்று அதனுள் சென்று பார்க்கவில்லை.. இன்று தான் பார்தேன்… பூசிணிக்காய் என்று தெரிந்த்து… உங்கள் ஊரில் தடியங்காய் என்று கூறுவிர்களா?
நன்றாக இருந்த்து. பூண்டுடன் சுவையாக இருந்த்து. நான் இதுவரை பூண்டு சேர்த்து இட்லி சாம்பார் தான் செய்வேன். வித்தியசமாக இருந்த்து.
அன்புடன்,
கீதா ஆச்சல்

தடியங்காய் சாம்பார் இன்று செய்தேன் . இன்னும் சுவைக்கவில்லை. சேர்க்கலை :(

ஆசியா அக்கா நாம ரெண்டு பேருக்கும் இன்னும் ஒரு பெரிய (மன்னிக்கவும் அளவில சின்ன) ஒற்றுமை இருக்கு தூத்துக்குடி/கோவை அல்லாத ஒன்று. என்ன சொல்லுங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானே ஒரு டியுப் லைட்,புரிய நிறைய நேரம் ஆகும்,நீங்களே சொல்லுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இலா,ஆசியா -இரண்டு பேரின் பெயரும் ஆ-ஆ என முடிவது.சரியா இலா?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

இன்று உங்க தடியங்காய் சாம்பார் செய்தேன்.அருமையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது.காரம் தான் சிறிது அதிகமாயிடுச்சி. அடுத்த முறை செய்யும் போது கம்மி பண்ணனும்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.