புதினா சட்னி

தேதி: February 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா -1கட்டு
சின்னவெங்காயம் -10
காய்ந்தமிளகாய் -2
கொத்தமல்லிவிதை -1ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
மிளகு -1/4 ஸ்பூன்
பூண்டு -4பற்கள்
இஞ்சி -சிறு துண்டு
தேங்காய்துருவல் -1/4கப்
பொட்டுகடலை-2டேபிள் ஸ்பூன்
புளி - கொட்டைபாக்கு அளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணை -1ஸ்பூன்


 

புதினாவை ஆய்ந்து தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும்.
சின்னவெங்காயத்தை தோலுரித்துவைக்கவும்.இஞ்சி,பூண்டை சுத்தம் செய்யவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.அதில் கொத்தமல்லி,சீரகம்,மிளகு,மிளகாய்,பூண்டு,இஞ்சி போட்டு வதக்கவும்.
புதினாவை போட்டு நன்கு வாசம் வரும்வரை வதக்கவும்.அத்துடன் தேங்காய்துருவல்,பொட்டுகடலை புளி, உப்பு போட்டு வதக்கி ஆறவைக்கவும்.
நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.


இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். வெரும் சாதத்திலும் போட்டு சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் செல்வி,
புதினா சட்னி தோசையுடன் சாப்பிட சுவையாக இருந்தது.நன்றி செல்வி.

செய்துபார்த்து பின்னூட்டம் கொடுத்ததுக்கு நன்றி.இந்த சட்னி தோசைக்கு நன்றாக இருக்கும்.
செல்வி

சவுதி செல்வி