என் மகனுக்கு help please

என் மகனுக்கு இரண்டு நாட்களாக மூக்கில் சளி தொந்தரவு இருக்கிறது மூச்சி விட மிகவும் கஷ்டப்படுகிறான்
night தூங்காமல் கஷ்டப்படுகிறான் என்ன செய்யலாம் ?

ராஜி எப்படி இருக்கிங்கபா.... குழந்தைக்கு சளி அதிகமாக இருக்கா பயப்புடாதிங்கப்பா.....
சரியா போயிடும். எனக்கு வேறு செல்ல தெரிய வில்லை.
மற்ற தோழிகள் செல்லுவார்கள். நான் கடவுலை வேண்டிக்கொள்கிரேன்.
தோழிகளே சீக்கிரம் வாங்கள் குழந்தைக்கு சளி போக்க வழி செல்லுங்கள் please....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஜெயந்தி மேடம் சொல்லி இருப்பது-//சளிக்கு குழந்தை தூங்கும்போது தேங்காய் எண்ணெயை லேசாக சுட வைத்து சிறிது கட்டிக் கற்பூரத்தைப்போட்டு முதுகு, மார்பில் தடவி விட்டு ஒரு சின்ன தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு அதன் சுடரில் கையைக் காண்பித்து (நம் கை பொறுக்கும் சூடில்) குழந்தையில் மார்பு, முதுகில் ஒத்தி எடுக்கவும்.//

செல்வி மேடம் சொல்லி இருப்பது-
//சளி பிடிச்சா, ஆரம்பத்திலேயே, தேங்காய் எண்ணெயில் ஒரு துளி மஞ்ச்ள் தூள், ஒரு துளி கற்பூரம் (ஒரு துளி என்பது ஒரு சிட்டிகையில் பத்தில் ஒரு பாகம்) போட்டு, சூடு செய்து, வெதுவெதுப்பாக ஆறியபின் குழந்தையின் நெஞ்சு, மூக்கு எல்லாம் தடவலாம்.

கற்பூர வெற்றிலையை விளக்கில் வாட்டி, லேசான சூடு இருக்கும் போது, நெஞ்சில் போட்டால் சளி கரைந்து வெளியே வரும்.//

இன்னும் நிறைய பேர் இந்த link-ல் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/no/7501

http://www.arusuvai.com/tamil/forum/no/9905

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஒரு மெல்லிய துணியை நனைத்து உங்கள் சுண்டு விரல் கொண்டு முதலில் மூக்கை கிளீன் பண்ணுங்கள்

மற்றபடி செல்வி அக்கா, ஜே மாமி முறையை பின்பற்றவும்
.

பின் தொண்டை, கதுக்கு கீழ் உள்ள நரம்புகளில் லேசாக தைலம் கையில் சூடு பொறுக்க்கா இரண்டு விரலால் குழத்து தடவவும்.

கொதிக்கும் பாலில் நான்கு இதழ் சாப்ரானை(குங்கும பூ) கரைத்து கொடுக்கவும்.

ஆவி பிடிக்க வையுங்கள். கழ்டம் தான் நீங்களும் சேர்ந்து பிடிங்க கூடவே...

கையில் உள்ள தைலத்தை மூச்சு விடும்போது காண்பித்து கொண்டே இருங்கள்.

சூடான வெண்ணீர் அருந்த விடவும்.
ஜலீலா

Jaleelakamal

உங்க மகனுக்கு என்ன வயசுன்னு சொன்னால் ஆலோசனை சொல்பவர்களுக்கு எளிதாக இருக்கும். மிளகு கஷாயம் வெச்சிக்கொடுங்க.
தேனில் மிளகுத்தூள் போட்டு சாப்பிடக்கொடுக்கலாம். விக்ஸ் லேசா சூடு பண்ணி கழுத்து, நெஞ்சுப்பகுதி, காதோரம், முதுகுப்பக்கம், வயிற்றின் அல்லைப்பக்கம் என்று தடவி விடலாம். குடிக்க லேசான சுடுதண்ணீரே கொடுங்க!

என்னுடைய சந்தெகத்திற்கு பதில் அளித்த அனைத்து friends நன்றி
எப்படி form open செய்வது எனக்கு open
ஆகவில்லை என் மகனுக்கு 18 மாதம் ஆகிறது

அடடா,
அப்ப நான் சொன்ன எதுவுமே கொடுக்க முடியாது. ஒருவேளை இன்னும் நீங்க தாய்ப்பால் கொடுத்திட்டு இருந்தா இதெல்லாம் நீங்க சாப்பிடுங்க!
கற்பூரவல்லி இலை கேள்விப்பட்டு இருக்கீங்களா? அந்த செடியை வீட்டிலேயே தொட்டியில் வளர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு சளி பிடிச்சா அதனை சுத்தம் செய்து, சுடுதண்ணீரில் கசக்கி சாறு எடுத்து சங்கில் ஊற்றலாம்!

ஏன் உங்களால் அந்த forums-ஐ திறக்க முடியவில்லை?கொடுத்திருக்கும் link-ஐ ஒரே லைனில் வருமாறு notepad-ல் adjust செய்து பின்பு link-ஐ பாருங்கள்.அல்லது நீங்கள் இருக்கும் page-ன் address bar-லேயே ஒரு பாதியை copy,paste செய்துவிட்டு மீதி பாதியையும் copy,paste செய்து கொள்ளுங்கள்.
or just do slight modifications in the current page's address bar like just changing only the forum number(if you are already in someother forum)and hit enter or just delete watever is not needed and paste the remaining.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

www.arusuvai.com/tamil/forum/no/7501
www.arusuvai.com/tamil/forum/no/9905

வெற்றிலையில் vicks தடவி மிதமான சூட்டில் காட்டி எடுத்து பிள்ளையின் உச்சந்தலை,நெஞ்சு, முதுகிலும் 5 நிமிடம் வைக்கவும்.இதனை 4 - 5 வேளையும் செய்யவும்

வெற்றிலை,துளசி இரண்டையும் நல்ல கழுவி தண்ணீரில் போட்டு பனங்கற்கண்றை சேர்த்து கொதிக்க வைத்து கொடுக்கவும்

directly type the link in ur addressbar
http://www.arusuvai.com/tamil/forum/no/7501 http://www.arusuvai.com/tamil/forum/no/9905

என் மகனுக்கு 3 வயது..கடந்த 4 நாட்களாக உள்ளங்கையிலும் விரல்கள் மேலும் சிறியதாக வேர்க்குரு மாதிரி இருக்கிறது...என்ன செய்வது..அது வேர்க்குரு தானா??

Friends make Life Beautiful !!!

மேலும் சில பதிவுகள்