இட்லி மாவு முட்டை குழிப்பணியாரம்

தேதி: February 22, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி மாவு - அரை கப்
முட்டை - 2
எண்ணெய் - சிறிது
மிளகாய் - 2
மல்லி கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
உப்பு - சிறிது


 

மூட்டையுடன், உப்பு கட் செய்த மிளகாய், வெங்காயம், மல்லி கறிவேப்பிலை சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
பின்பு அத்துடன் இட்லி மாவை சேர்த்து குழிப்பணியார சட்டியில் எண்ணெய் தடவி, மாவு முட்டை கலவை ஸ்பூனால் விட்டு திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
புசு புசு என்று அமுங்காமல் டேஸ்டாக இருக்கும்.
சுவையான இட்லி மாவு குழிப்பணியாரம் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

நேத்து ஈவ்னிங் போரடிச்சது. இதை செஞ்சி சாப்பிட்டோம். நல்ல க்ரிஸ்ப்பியா சூப்பரா இருந்தது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆசியா அக்கா,
இன்னும் கடைக்கு செல்லவில்லை…முட்டை இல்லை…ஆனால் குழிபாணியாரம் செய்தேன்…நாளை தான் கடைக்கு போகனும்…மாவு கொஞ்சம் தனியாக எடுத்து வைத்துள்ளேன்…முட்டை வந்த பிறகு செய்ய…
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஆசியா மேடம் நேத்து காலையில் உங்க இட்லிமாவு குழிப்பணியாரம் செய்தேன்,நானும் இப்படி தான் செய்வேன்,ஆனா முட்டை போட மாட்டேன்,இதுல முட்டை போட்டு செய்தேன் நல்லா இருந்தது,என் வீட்டுக்காரர்,இப்பெல்லாம் எல்லாத்தலையும் முட்டைய போட்டு அடிச்சர போலயிருக்குனு கேட்டார்,திங்கட்கிழமை உங்க வெண்டைக்காய் முட்டை பொரியல் செய்தேன்,எல்லாம் ஒரே முட்டை மயமா இருக்குனு சொல்றார். எல்லாமே நல்லா இருந்தது. நன்றி.

சமைத்து பின்னூட்டம் கொடுப்பது,அதை படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா இட்லிமாவு குளிப்பனியரம் செய்தேன் சுவை வித்தியாசமாக இருந்தது நன்றி

உங்க பின்னூட்ட்டதிற்கு மிக்க நன்றி.புதுசா நீங்க,முன்பு அதிகம் உங்க பெயரை பார்க்கலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா இட்லிமாவு குளிப்பனியரம் செய்தேன் சுவை வித்தியாசமாக இருந்தது நன்றி