சுக்கினி துவையல்

தேதி: February 23, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுக்கினி - 1 பெரியது
தேங்காய் - 1/2 கப்
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடைசியில் தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். சுக்கினியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயினை வறுத்து தனியாக வைக்கவும்.
பிறகு வெட்டி வைத்துள்ள சுக்கினியை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
வதக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைத்து பின் அத்துடன் தேங்காய் , புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
கடைசியில் தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து இத்துடன் சேர்த்து கலக்கவும்.
இப்பொழுது சுவையான சுக்கினி துவையல் ரெடி.
இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்