சீனி அவரைக்காய் பருப்பு கூட்டு

தேதி: February 23, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீனி அவரைக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம்பருப்பு - 1/2 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்)
சாம்பார்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப


 

சீனி அவரைக்காயையும், பருப்பையும் குக்கரில் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சாம்பார்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
வெந்த சீனிஅவரைக்காய் பருப்பை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து தண்ணீர் வற்றி பருப்பு கூட்டு கட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்