கேரட், பீன்ஸ் பொரியல்

தேதி: February 23, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப


 

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், கேரட் மற்றும் பீன்ஸையும் போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக காய் வதங்கியதும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு வேக வைக்கவும்.
அடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு தூவி கிளறி மூடிவைத்து 2 நிமிடம் பொறுத்து கடலை மாவைத் தூவி கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்