பாசிபருப்பு அடை

தேதி: February 23, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - 4 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி


 

முதலில் பாசிப்பருப்பினை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு பாசிப்பருப்பினை காய்ந்த மிளகாயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியை பொடியாக வெட்டி கொள்ளவும்.
அரைத்த மாவுடன் வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி, சீரகம் ,உப்பு மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லினை காயவைத்து சிறிய சிறிய கனமான அடைகளாக சுட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் 2 - 3 வேகவிடவும்.
இப்பொழுது சுவையான பாசிப்பருப்பு அடை ரெடி. இத்துடன் சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ கீதா ஆச்சல்,
இன்றைக்கு இரவு சமையலில், உங்க பாசிபருப்பு அடை செய்தேன். ரொம்ப எளிதாக செய்யும் ஒரு திடீர் டிபன் ஐயிட்டம் இது. டேஸ்ட்டும் நன்றாக இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி ஸ்ரீ.
உடலிற்கு மிகவும் சத்தனாது. ஆமாம் இதனை உடனே செய்து விடலாம்…மிகவும் சுவையாக இருக்கும்..எனக்கும் மிகவும் பிடித்தது..
அன்புடன்,
கீதா ஆச்சல்