அவகோடா டிப்

தேதி: February 24, 2009

பரிமாறும் அளவு: (2-3) நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
உள்ளி (பூண்டு) - ஒரு பல்
அவகோடா - ஒன்று
கொத்தமல்லி தழை - 2 இணுக்கு
உப்பு - 2 சிட்டிகை
எலுமிச்சைப்பழம் - அரை பாதி


 

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, உள்ளி (பூண்டு), மிளகாய் ஆகியவறை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அவகோடா 2 ஆக கட் செய்து அதன் உள் இருக்கும் பகுதியை ஸ்பூனால் எடுக்கவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
நறுக்கிவைத்தவற்றை அதனுடன் போட்டு நன்கு கலக்கி உப்பு, எலுமிச்சை ஜுஸ் ஊற்றி சிப்ஸ் உடன் பரிமாறவும்.


அவகோடா சத்தானதும் சுவையானதுமாகும். ஆகவே அவகோடா டிப் மிக மிக சுவையானதாகும் .அவகோடா இரத்தத்தில் L.D.L கொலஸ்ட்ரோல் அளவைக் குறைக்க உதவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஒரு பாத்திரத்தில் அவகோடா 2 ஆக கட் செய்து அதன் உள் இருக்கும் பகுதியை ஸ்பூனால் எடுக்கவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி துஷ்யந்தி அக்கா எப்படி இருக்கிங்க. உள்ளி என்பது என்னப்பா..... இன்று கட்டாயம் செய்து நாளை செல்கிரேன்.

பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா...................பூண்டு தான் உள்ளி.

நேற்று நீங்கள் ஒபன் பண்ணிய குழந்தைகளின் பண்பாடு, கலாச்சாரம் த்ரெட்டில் உங்களுக்காக எனது நீண்ட பதிவு காத்திருக்கிறதுப்பா.

அன்புடன்:-).......
உத்தமி:-)

நன்றிப்பா...

பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*