பெயர் தெரியாத உணவு பொருள்

பெயர் தெரியாத உணவு பொருள்.... முதலில் இருந்தது அதிக பதிவுகள் ஆனதால் புதிது.

என் சந்தேகத்தை தீருங்கப்பா.... :( கொஞ்ச நாள் தெளிவா இருந்தேன் இன்னைக்கு மீண்டும் குழம்பிட்டேன்.

shahi jeera / black cumin seeds - பார்க்க சீரகம் போலவே இன்னும் சின்னதா வாசம் அதிகமா இருக்குமாம். இதோட தமிழ் பேரு சொல்லுங்கோ.

caraway seeds - பார்க்க சோம்பு போலவே இன்னும் ஷார்ப்பா வாசம் அதிகமா இருக்குமாம். இதோட தமிழ் பேரும் சொல்லுங்கோ. அதிகமா கேக் வகைக்கு தான் பயன்படுதாம்.

ajwain / carom seeds - இது ஓமம் தான்னு நம்பறேன். தப்பா இருந்தா சொல்லுங்கோ.

Aniseed - பெருஞ்சீரகம் (Hari Saunf).
Cumin seed - சீரகம் (Jeera).
Fennel seeds (Saunf)???? - பார்க்க சோம்பு போலவே இருக்கு. குழப்புது. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ரொம்ப குழம்ப வேண்டாம், அதுவும் (fennel seeds) சோம்பு தான்ப்பா..

அன்புடன்:-)......
உத்தமி:-)

மிக்க நன்றி உத்தமி... மிச்சத்துக்கும் பதில் சொல்லாம இந்த இழையை உள்ளே அனுப்பவது சரியா? சந்தேகத்தை போக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

http://www.arusuvai.com/tamil/forum/no/3327 இந்த லிங்க் போய் பாருங்கள்,உங்கள் சந்தேகம் தீரும் என நம்புகிறேன்.

கடைசி வரைக்கும் தமிழ் பேரை சொல்லலை. ;) மிக்க நன்றி சுகன்யா.... இன்னும் குழப்பினதுக்கு. ஹிஹிஹீ. (சும்மா.... கோவிக்காதிங்க)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்