Dark circles around the eyes

Hi,I have dark circles around my eyes for a very long time I tried many things but nothijg works out . It some times look so obvious that people ask me if Iam sick can somebody please help me

ஏன் இப்படி? ஒரே கேள்வியை 6 முறை கேட்டு இருக்கீங்க:-((

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

http://www.arusuvai.com/tamil/forum/no/11024

இன்னும் நிறைய பார்க்கணும்னா "தேடுக" box-ல் கருவளையம்னு தேடிப் பாருங்க.ஏற்கனவே யாரவது சொல்லி இருந்தா அந்த thread links வரும்.அதை click பண்ணி பாருங்க.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் அனீஸா, டார்க் சர்க்கிள் வர நிறைய காரணம் இருக்கு. முக்கியமா தூக்கம் மற்றும் மன அழுத்தம். இது ரெண்டு இருந்தா, அதுக்கு மருந்து, மனசை ரிலாக்ஸ் பண்றதும், நல்லா தூங்கறதும்தான். அப்படி இல்லாம முகத்தை சரியா கவனிக்காம, அதிக வெயிலிலோ அல்லது 30 வயதைத் தாண்டி இருந்தாலோ வரும் டார்க் சர்க்கிள் என்றால் நிச்சயம் மறைய வைக்கலாம். கண்கள் டயர்டாக இருக்கும்போது டீ பேக்கை சிறிது குளிர் தண்ணீரில் 5 நிமிடம் போல் ஊறவைத்து, பிறகு அந்த டீ பேக்கை கண்கள் மேலே வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுங்கள். கண்கள் நல்ல புத்துனர்ச்சியுடனும், puffiness குறைந்தும் இருக்கும். இதே போல் இரவு உறங்கும் முன் சுத்தமான ( டாபர் போன்ற பிராண்டுகளில் கிடைக்கும்) பன்னீரை பஞ்சில் நனைத்து கண்களில் வைத்து அப்படியே தூங்கிவிடுங்கள். கண்களின் டயர்ட்னெஸ் போய் கண்களை சுற்றியுள்ள இடங்களும் சுருக்கம் இல்லாமல் இருக்கும். கருமை போக நல்ல தரமான Dark Circle Remover க்ரீமை வாங்கி அதனை மிகவும் சிறிய அளவில் எடுத்து கண்களை சுற்றி தடவுங்கள். அதிக அளவில் தடவ கூடாது. அதே போல் கண்களின் வெளிப்பகுதியிலிருந்து உள்நோக்கி தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். சர்க்குலராக மசாஜ் செய்ய வேண்டியதில்லை. கண்களில் எப்போதும் க்ரீம் அணிந்திருப்பதை தவிருங்கள். முகியமாக இரவு தூங்கும் முன்பு லேசாக தடவிய டார்க் சர்க்கிள் ரிமூவரை தவிர வேறு எதுவும் தடவாதீர்கள்.லோரியல், கார்னியர் போன்ற பிராண்டுகள் நன்றாக இருக்கும். இயற்கையாக என்றால தயிர் அல்லது உருளைக்கிழங்கு சாறு தடவுங்கள். Puffiness குறைய வெள்ளரி சாறையும் தடவலாம். ஆனால் இது கருமையை போக்காது.

இந்த அனைத்தையும் பின்பற்றி சரியாகவில்லையென்றால் மருத்துவரை சென்று ஒரு ஜெனரல் பாடி செக்கப் செய்து கொள்ளுங்கள். அதுவே சிறந்த வழி.

தேவா மேடம் ரொம்ப நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறீர்கள்.நீங்கள் இஞ்சினியர் என்று போட்டுயிருக்கிறீர்கள்.அழகுக்கலை பற்றி நன்றாக தெரிகிறது உங்களுக்கு,எப்படி இதன் ரகசியம் நீங்கள் அழகுக்கலை படித்துள்ளீர்களா?உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை.

உமா

முகம் கழுவ என்ன பாவிக்கிறீர்கள்? சோப்பாக இருந்தால் அடியோடு நிறுத்துங்கள். முகத்தில் தோன்றும் எல்லா பிரச்சினைக்கும் சோப் தான் காரணம். நல்ல BRAND FACE WASH பாவியுங்கள். எனக்கு தெரிய மிக நல்ல FACE WASH "JOHNSON & JOHNSON FACE WASH" தான். முடிந்தால் கடலை மா, பயத்தம் மா போன்ற இயற்கையானவற்றை பாலுடனோ அல்லது தயிருடனோ கலந்து பாவியுங்கள்.

உடம்பில் கண்கள் தான் மிக மென்மையான பகுதி. அதனால் மிக மென்மையாக கையாள வேண்டும். அழுத்தி கசக்குவதோ, அழுத்தி தேய்ப்பதோ கூடாது. முகம் கழுவும் போது கூட கண்களை மோதிர விரல்களால் தான் மெதுவாக தேய்க்க வேண்டும்.

உருளை கிழங்கை வெட்டி கண்களில் வைத்து வந்தால் கருவளையம் நீங்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன். தேயிலை தூளை அவித்து சிறு பொட்டனமாக கட்டி கண்களில் வைத்து வந்தாலும் கருவளையம் போகும் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். தேன் போட்டு வரலாம். இரவில் ஒலிவ் ஆயில் போட்டு வரலாம்.

ஆனால் நம்பிக்கையோடு தொடர்ந்து பாவிக்க வேண்டும். எப்படியும் மாறிவிடும்

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எனக்கு திடீரென தலையின் ஒரு புறம் "நிறைய "நரைத்து விட்டது.எனது அம்மா,அப்பா இருவருக்கும் சீக்கிரமே நரைத்து விட்டதாம்.அதனாலா என்னவோ தெரியவில்லை?.மூன்று மாதங்களுக்கு முன்பு நான் பார்லரில் பிளாக்ஹென்னா முதல் முறையாகப் போட்டுக் கொண்டேன்,அதனால் ஒருவேளை இப்படி ஆகிவிட்டதா?.என்ன செய்வதென்றே தெரியவில்லை.யாராவது எனக்கு உதவுங்களேன்.Please help me.

தொடர்ந்து நல்லெண்ணை தேய்த்து குளிங்கள், வாரம் ஒரு முறை ஹென்னா தலைக்கு போட்டு கொள்ளுஙக்ள்.
ஜலீலா

Jaleelakamal

டீ பேக் தான் பெஸ்ட் பிளாக் டீ குடிக்க டீ போட்டு விட்டு அந்த பேகை அப்படியே தூக்கி எறியாமல், அதை இன்னும் கால் டம்ளர் வெண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து அந்த் பேகை எடுத்து இரண்டு கண்ணிலும் அப்ப அப்ப கண்ணீற்கு கீழே வையுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலிலா பானு மேடம்.ஹென்னா பவுடர் கடைகளில் கிடைக்குமா?.என்ன பிராண்டு வாங்குவது.மேலும் ஹென்னா போடுவதால் முடியின் நிறம் சிவப்பாக மாறுமா?.அல்லது வேறு ஏதாவது பக்கவிளைவுகள் உண்டா?.ஏனெனில் எனக்கு முடியின் அடர்த்தி வேறு குறைவாக உள்ளது.பார்ப்பவர்கள் அனைவரும் என்ன அதற்குள் முடி இவ்வளவு நரைத்து விட்டது என்று கூறுகின்றனர்.என்ன செய்வது?.

கீதா இது குறித்து நான் நிறைய திரெட்டில் எழுதி இருக்கீறேன், இப்ப முழுவதும் டைப் பண்ண டைம் இல்லை ஒரிரு வரி என்றால் சட்டுன்னு சொல்லலாம்.
நான் என் டிப்ஸ்களை என் பிளாக்கில் போட்டு வருகிறேன்.
இந்த ஹென்னா டிப்ஸும் இருக்கு பார்த்து கொள்ளுங்கள்.

இது எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் போட்டு வருகீறார்கள் நரை முடி முதலில் கருப்பாகும், பிறகு கொன்ச்ஜம் சிகப்பு கலந்தது போல் வரும் அதான் வாரம் ஒரு முறை போட்டு கொள்ளலாம் இல்லை 10 நாட்கலுக்கு ஒரு முறிஅ போட்டு கொள்ளுங்கள்.
பக்க விளைவி என்றால் தலை வலி, கழுத்து வலி தான் வரும் அது அடிக்கடி தலை வலி வருபவர்களுக்கு.
அப்படி தலை வலி உள்ளவர்கள் ஒரு மணி நேரம் ஊறவைப்பதற்கு பதில் 20 நிமிடம் ஊறவைத்து குளித்து விட்டு உடனே கொஞ்சம் தைலம் தேய்த்து கொள்ளகாம் இல்லை தலை வலி மாத்திரையும் போட்டு கொள்ளலாம்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்