தால் ரொட்டி

வழங்கியவர் : asiya omar
தேதி : புதன், 25/02/2009 - 08:00
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு : 2-4 நபர்களுக்கு
- பாசிப்பருப்பு -100 கிராம்
- கோதுமை மாவு - கால் கிலோ
- சிறிய கேரட் - துருவியது
- மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
- மிளகாய் பொடி - கால் ஸ்பூன்
- வெங்காயம் - 1
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக கட் செய்த வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள், மிளகாய் பொடி, கேரட் துருவியது சேர்த்து நன்கு வதக்கி பாசிப்பருப்பு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நிதானமாக 2 விசில் விட்டு எடுக்கவும். நன்கு வெந்த பின்பு மசித்துக் கொள்ளவும்.
- பின்பு அதனோடு உப்பு, கோதுமை மாவை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரமாவது வைக்கவும்.
- அதனை தேவையான அளவிற்கு உருண்டைகளாக்கி சப்பாத்தி கட்டையில் மாவு போட்டு பரத்தி ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் நெய் அல்லது எண்ணெய் விட்டும் சுடலாம்.
- சுவையான தால் ரொட்டி ரெடி. இதனை துண்டு போட்டு அப்படியேயும் சாப்பிடலாம். அல்லது ரைத்தா உடன் சாப்பிடலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஆசியா எனக்கு ஒரு டவுட் நீங்கள் பாசிப்பருப்பை வறுத்து வேக வைப்பீர்களா அல்லது வறுக்காமல் வேகவைப்பீர்களா? நான் பாசிப்பருப்பைப் வறுத்துத்தான் பயன்படுத்துவேன். இந்த ரொட்டிக்கு எப்படி செய்வீர்கள் என்று சொன்னால் நாளை இந்த ரொட்டி செய்ய வசதியாக இருக்கும்.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"
ரொட்டிக்குபாசிப்பருப்பை வறுக்க மாட்டேன்,தால்,சாம்பார் மற்றவைக்கு லேசாக வறுத்து செய்வேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
உடன் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.
இன்று தால் ரொட்டி செய்தேன்,அருமையாக இருந்தது.
நான் வழமையாக துவரம்பருப்பு ரொட்டி செய்வேன்.இன்று வித்தியாசமாக இது செய்தேன் நன்றாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"
மிக்க மகிழ்ச்சி.உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
தால் ரொட்டி மிகவும் அருமையாக இருந்த்து. நானும் இப்படி தான் செய்வேன். ஆனால் இஞ்சி பூண்டு விழிது சேர்த்த்தில்லை. நன்றாக இருந்த்து. நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்
மிக்க மகிழ்ச்சி,பின்ச் கரம் மசாலா கூட சேர்க்கலாம்பா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா தால் ரொட்டி சூப்பர் டேஸ்ட்ப்பா, எஞ்சாய் பண்ணி சாப்பிட்டோம். தாலில் செய்வது இதுதான் முதல் முறை, புதுசா ஒரு குறிப்பு கத்துக் கொடுத்ததற்கு ரொம்ப....ரொம்ப நன்றிப்பா. எவ்வளவு ஹெல்தியானது, இனி எங்க வீட்டு சமையல்ல அடிக்கடி இருக்கும். அதுக்கும் சேர்த்து நன்றிகள். பாசிப்பயிரை வழுவழுப்பில்லாமல் இருப்பதற்காக எப்பொழுதும் கொஞ்சம் வறுத்துட்டுத்தான் செய்வேன்ப்பா, பாதி தக்காளியும் கட் பண்ணிப் போட்டு செய்தேன் ரொம்ப நல்லாயிருந்துச்சு, மீண்டும் நன்றி. எதுக்கு இவ்வளவு நன்றீன்னா, எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு, இப்படி வெளிப்படுத்தரன்ப்பா.
அன்புடன் :-)
உத்தமி :-)
மிக்க மகிழ்ச்சி.எனக்கும் என் தோழி தான் சொல்லி தந்தாங்க.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா அக்கா! தால் ரொட்டி சூப்பர்! வெளியில் செல்லும்போது சைட் டிஷ் இல்லாமலே எடுத்து போவதற்கு ரொம்ப நல்லா இருக்கு. நன்றிமா!
ஆமாம்.வெளியே செல்லும் போது எடுத்து சென்றால் சாப்பிடக்கூட ஈசியாக இருக்கும்.நன்றி.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா தால் ரொட்டி சூப்பர் டேஸ்ட்பா தாலில் செய்வது இதுதான் முதல் முறை
இனி எங்கவீட்டு சமையல்ல அடிக்கடி இருக்கும் ரொம்ப நன்றிமா