சேப்பங்கிழங்கு ப்ரை

தேதி: February 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

சேப்பங்கிழங்கு – அரைக் கிலோ
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் சேப்பங்கிழங்கை போட்டு வேக வைத்து எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு அகலாமான பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் வேக வைத்து தோல் உரித்த சேப்பங்கிழங்கை போடவும்.
சேப்பங்கிழங்கில் மசாலா நன்கு எல்லா இடங்களில் சேரும்படி பிரட்டி 10 நிமிடம் வைத்திருக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சேப்பங்கிழங்கு துண்டுகளை போடவும்.
கிழங்கை 10 - 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்கவும்.
சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி. இதனை கலந்த சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதங்களுடன் சாப்பிட ருசியாக இருக்கும். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கீதா உங்க வெஜ் ரெசிப்பிஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் சிம்பிள். மேலும் நிறய்ய குடுங்க.

மிகவும் நன்றி விஜி. எப்படி இருக்கிங்க.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா,
உங்க குறிப்பு நல்லாயிருக்கு. இங்க சேப்ப கிழங்கு chinese storesla நிறய கிடைக்கும். நான் வாங்கினதே இல்லை. இது ட்ரை பண்ரேன்.
உங்க stuffed கத்தரிக்காய் நேத்து பண்ணிட்டேன். தயிர் சாதத்துக்கு ரொம்ப நல்லாயிருந்தது.
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

மிகவும் நன்றி கிருத்திகா,
எப்படி இருக்கிங்க..நேற்று கத்திரிக்காய் செய்திங்களா..மிகவும் சந்தோசம் பா…
இதனையும் செய்து பாருங்கள்..மிகவும் சுவையாக இருக்கும்…எங்கள் வீட்டில் அம்மா எப்பொழுதும் இப்படி தான் செய்வாங்க…இப்படி செய்தால் சேப்பகிழங்கு குழகுழப்பாக இருக்காது.
அன்புடன்,
கீதா ஆச்சல்.

உங்க ரெஸிப்பி ரொம்ப ஈஸியா, நல்லா இருக்கு கீதா ஆச்சல். மெலிதாக நறுக்கி எண்ணெயில் டீப் பிரை பண்ணிகொடுத்தால்மட்டும் சேப்பங்கிழங்கு சாப்பிடுகிறார்கள் என் வீட்டில்! ஆனால் எப்பவும் அது நல்லதில்லையே... (அதிக எண்ணெய்). கண்டிப்பா இந்த மெத்தெட் ட்ரை பண்ணிபார்த்துட்டு சொல்றேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி சுஸ்ரீ. இப்படி செய்து பாருங்கள். நன்றாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா ஆச்சல்,
அப்போதே செய்ய நினைத்தது, இன்றுதான் முடிந்தது (ஒரு வழியா நியாபகமா சேப்பங்கிழங்கு இந்தமுறை வாங்கிட்டேன் இல்ல!). ரொம்ப சூப்பரா மிக நன்றாக இருந்தது இந்த ஃபிரை. செய்வதற்கும் ரொம்ப ஈஸி. இன்று உங்க சுக்கினி சாம்பார் செய்து அதனுடன் சேர்த்து சாப்பிட்டோம். வெரி டேஸ்டி! அருமையான இந்த குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஸ்ரீ,
மிகவும் நன்றி பா..
நாளைக்கு பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் அன்பு மகளிற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவிக்கவும்.
நன்றாக இருந்ததா…மிகவும் மகிழ்ச்சி..எப்படி தான் இவ்வளவு நியபாக சக்தியோ(நியபகமாக வாங்கி செய்துவிட்டுங்க..)..நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

lakshmi ravindran
this is very simple and came out very nice,thankyou

lakshmi ravindran

மிகவும் நன்றி லஷ்மி.
அந்த லின்கினை பார்த்திங்களா?
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிக்க நன்றி கீதா ஆச்சல் உங்கள் வாழ்த்துக்களுக்கு. நிச்சயம் அவளுக்கு தெரியப்படுத்துகிறேன்.
ஆக்சுவலா, நான் போனதடவை காய்கறி வாங்கும் போது மறந்து போய்விட்டேன். இந்த வாரம் நியாபகம் வந்தது, அதான். என் ஹஸ்க்கும் ரொம்ப பிடித்திருந்தது இந்த ஃபிரை. டிஃபரெண்டா நல்லா இருக்கு என்று சொல்லி சாப்பிட்டார்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கீதா இன்று சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன் யுவன்க்கு வறுவல் மிகவும் பிடிக்கும் அதனால் காரம் குறைத்து செய்தேன் மிகவும் அருமை

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் கீதா,

இன்று சேப்பங்கிழங்கு ப்ரை செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.இது என் குழ்ந்தைகளுக்கு மிகவும் பிடித்து பொய் விட்டது. மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி,
மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்