மிக்சர்

தேதி: February 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைமா - 4 கப்
மைதாமா - 4 கப்
கடலைப்பருப்பு - 500 கிராம்
கொண்டைக்கடலை - 200 கிராம்
கச்சான்(வேர்க்கடலை) - 200 கிராம்
பயறு - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 200 கிராம்
ஓமப்பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்(தனித்தூள்) - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
கடலைப்பருப்பை 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்பு அவற்றை தனித்தனியே பொரித்து எடுக்கவும்.
கடலைமா, மைதாமா இரண்டிலும் 2 கப் வீதம் எடுத்து ஓமப்பொடி, மிளகாய்த்தூள் 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, உப்பு சேர்த்து குளிர்ந்த நீரில் குழைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, ஓமப்பொடி உரலில் குழைத்தமாவை திணித்து எண்ணெயில் பிழிந்து ஓமப்பொடியைப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மீதம் உள்ள கடலைமா, மைதாமாவை எடுத்து மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு குழைக்கவும்.
கடலைமாக் கலவையை ஒரு கரண்டியில் எடுத்து கண் உள்ள கரண்டியில் தேய்த்து எண்ணெயில் விழுத்தி பொன்னிறமாகப் பூந்தியைப் பொரித்து எடுக்கவும்.
பயறு, கச்சான், கறிவேப்பிலையையும் பொரித்து எடுக்கவும்.
ஒரு பெரியபாத்திரத்தை எடுத்து பொரித்தவற்றை எல்லாம் சேர்த்து முந்திரிப்பருப்பு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக எல்லாம் சேரும்படி கலக்க வேண்டும்.
சுவையான மிக்ஸ்ர் தயார்.


விரும்பினவர்கள் மரவள்ளிக்கிழங்கு வெட்டிப் பொரித்தும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்