தக்காளி வெங்காயம் இல்லாத குழம்பு

தேதி: February 25, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - 1/4 கப்
செளசெள - 1
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1/2 கொத்து
கொத்தமல்லி - 1/2 கொத்து
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைகரண்டி


 

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள்.
சௌசௌவை தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்குங்கள்.
பருப்பில் சௌசௌ,சாம்பார் பொடி, பெருங்காயம்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து வேகவிட்டு புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள்.புளி பச்சை வாசனை போக கொதித்த பிறகு, தாளிக்கும் பொருட்களை தாளித்து சேர்த்து, கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்குங்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மைதிலி
ஹாய் நலமா? இன்று உங்களின் இந்த குழம்பு செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது, 2 பல் பூண்டு மட்டும் சேர்த்துக்கொண்டேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் மஹாபிரகதீஸ்,

எப்படி இருக்கீங்க? நான் நலம். நான் பூண்டு சேர்க்க மாட்டேன் இருந்தாலும் பண்ணிபார்க்கிறேன் மஹா. பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி, இக்குழம்பு செய்தேன், எனக்கு வெள்ளைப் பூசணிக்காய்தான் கிடைத்தது, அதில்தான் செய்தேன், நன்றாக இருந்தது. நல்ல குறிப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா
வெள்ளைப் பூசணிக்காய்க்கு இந்த குழம்பு இன்னும் சுவையாக இருக்கும்
கலக்கிட்டிங்க போங்க..பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb