பட்டர் சிக்கன்

தேதி: February 26, 2009

பரிமாறும் அளவு: 4-6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
பட்டர் - 50 -75 கிராம்
காஷ்மீரி சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
முந்திரிப்பருப்பு - 8-10
புளிப்பில்லாத கட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை -1, கிராம்பு-2, ஏலம் - 2
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - அலங்கரிக்க


 

சிக்கனை ஒரே போல் மீடியம் சைஸ் துண்டுகள் போட்டு அதனை நன்கு சுத்தம் செய்து அலசி நீர் இல்லாமல் வைக்கவும்.
பின்பு சிக்கனில் இஞ்சி பூண்டு, தயிர், உப்பு, சில்லிபவுடர் 1 ஸ்பூன் போட்டு பிரட்டி ஊற வைக்கவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும்.
வெங்காயம், முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆறவைக்கவும்.
மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும். அரைக்கும் பொழுது கவனம், தக்காளி வெளியே தெளித்து விடும்.
பின்பு கடாயில் பட்டர் விட்டு அதிகம் உருகும் முன்பு, பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனை போட்டு சிவக்க பிரட்டி வேக விடவும்.
பின்பு அரைத்த தக்காளி,முந்திரி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து ,1 டீஸ்பூன் சில்லி பவுடர்,உப்பு சிறிது சேர்த்து பிரட்டி,சிறிது தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதிவந்து மணம் வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பட்டர் சிக்கன் ரெடி. இது நாண்,சப்பாத்தி,பரோட்டா உடன் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hi

Thnks for this yummy recipe...the gravy was juicy n tasty

butter chicken senju pathen innaike romba taste ah irundhathu ellarukum rmba pidichurundhathu...enakum dan thank u...

ஆசியாக்கா பட்டர் சிக்கன் நேற்று செய்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. என்னவருக்கு பிடித்துவிட்டது மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

சமைத்து அசத்திவிட்டீர்கள் போல் தெரிகிறது.நன்றி.மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று இந்த ரெஸ்பியை செய்தேன் ஜலீலக்காவின் பிரைட் ரைஸுடன் அருமையா இருந்தது நன்றி

ஆனால் அதிக பட்டர் சேட்கவில்லை ஒரே ஒரு கியூப் நான் கொலஸ்ட்ரால் பட்டர்தான் சேத்தேன் மீதி எண்ணைதான் இதுக்கு பெயர் பட்டர் சிக்கனான்னு கேட்பது தெரியுது :-D என்ன செய்ய இவருக்கு ஒத்துகாது..இதுவே சூப்பர் டேச்டா வந்தது

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

செய்து பின்னூட்டம் அனுப்பியது குறித்து மகிழ்ச்சி.நாண் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.