உளுத்தங்களி

தேதி: February 26, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சிகப்பு அரிசிமா (வாசனை வரும்படி வறுத்தது) - 2 சுண்டு
தேங்காய் பால் - ஒன்று
சீனி (சர்க்கரை) - முக்கால் சுண்டு
ஏலக்காய் - 5 கிராம்
வாசனை வரும்படி வறுத்த உளுத்தம்மா - ஒரு சுண்டு
வறுத்த பாசிப்பருப்பு (பயறு) - அரை சுண்டு


 

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் தேங்காய்பால், சீனி போட்டு நன்றாக காய்ச்சவும்.
அதன்பின்பு அதில் அரிசிமா, உளுத்தம்மா, பயறு (பயித்தம்மா) ஆகியவற்றை போட்டு அடிப்பிடிக்காமலும் கட்டிபடாமலும் நன்றாக கிண்டவும் (களி பதத்திற்கு).
அதன் பின்பு ஏலக்காய்த்தூள் போட்டு அதை நன்றாக கிண்டவும்.
கிண்டிய களி தாட்சியில் ஒட்டாமல் திரளும் பதத்தை அடைந்ததும் தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கி களியை ஒரு பாத்திரத்தில் போடவும். அதன் பின்பு அதை பரிமாறவும்.


இலங்கையில் பூப்பெய்தும் பெண்குழந்தைகளுக்கு தினமும் உளுத்தங்களி சாப்பிட கொடுப்பது வழக்கம் உளுத்தங்களியில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம்,வைட்டமின் ஆகிய பலசத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன் உளுத்தங்களியை கொடுப்பதால் அவர்களின் இடுப்பெலும்பு வலுவாகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - அரிசிமா, உளுத்தம்மா, பயறு (பயித்தம்மா) ஆகியவற்றைபோட்டு அடிப்பிடிக்காமலும் கட்டிபடாமலும் நன்றாக கிண்டவும்(களிபதத்திற்கு), கிண்டிய களி தாட்சியில் ஒட்டாமல் திரளும் பதத்தை அடைந்ததும் தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கி களியை ஒரு பாத்திரத்தில் போடவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உளுந்தகழி செய்ய தெரியாமல் வருத்தப்பட்டு புலம்பிட்டு இருந்தேன்.நன்றி.. என்னோட பொண்ணுக்கு செய்துகொடுக்க போரேன்

உளுந்து களி எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம். நீண்ட நாட்களாகிவிட்டது சாப்பிட்டு. இப்போது அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டேன். (முட்டை, சீனி சேர்த்து செய்யப் போகிறேன்)

ஒரு சுண்டு என்பது எத்தனை கிராம் ?