லவ்கி கோஃப்தா

தேதி: February 26, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுரைக்காய் 1
கடலை மாவு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 3
எண்னெய் - பொரிப்பதற்க்கு
உப்பு - தேவைகேற்ப்ப

க்ரேவிக்கு
--------------

தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளாகாய் தூள் - 1 தே.க
தனியா தூள் - 1 தே.க
இஞ்ஞி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.க
கரம் மசாலா தூள் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்ணெய் - 1 தே.க


 

கோஃப்தா செய்முறை
---------------------

சுரைக்காயை தோல் எடுத்து துருவியில் துருவவும்.
துருவல்லிருந்து தண்னிரை நல்ல பிழிந்து எடுக்கவும்.
கடலைமாவு,உப்பு,நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து
கலக்கவும்.
சின்ன போண்டா வடிவில்ல் உருண்டைகளாக
செய்து கொள்ளவும்.

இதை கிரேவியில் பொரித்த கோஃப்தாக்களை போடவும்.

கிரேவி செய்முறை
-----------------

தக்காளி பழத்தை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தால்
தோல் வந்து விடும்., அதை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தை துருவியில் துருவி கொள்ளவும்.
எண்ணெய் விட்டு வெங்காயத்தை 5 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
அதில் இஞ்ஞி பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்கவும்.
பின் மசாலா பொடிகள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
தக்காளி துண்டுகளோடு உப்பும் சேர்த்து 1/2 கப்
தண்னிர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
கரம்மசாலாதூள் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம்
கொதிக்கவிட்டு இறக்கவும்.
நல்ல மிதமான சூடு இருக்கும் போது 5 பொரித்து
வைத்துள்ள கோஃப்தாக்களை போடவும்.
மீதி கோஃப்தாக்களை பரிமாறும் மும் அதில்
போட்டு பரிமாறவும்.

இது ரொட்டி, பூரி, புலாவ் போன்றவைக்களுக்கு நல்ல
சைட் டிஷ்.


இதே மாதிரி வாழைக்காயிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாழைக்காயில் கோப்தா எப்படி செய்யனும்.காயை அவித்து துருவனுமா அல்லது பச்சையாவே துருவி போடலாமா?

அதே டி,கே மேனகா தானே. உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினக்கிறேன். சரி ஆமாம் மேனகா
வாழக்காயை வேகவைத்து கையால் மசித்தால் கூட போதும் துருவ வேண்டும் என்றில்லை. சில வாழைக்காய்கள் சட்னு வெந்துவிடும். எனக்கு வாழைக்காய் கோஃப்தா தான் ரொம்ப பிடிக்கும். நிங்களும் செய்து பாருங்க. நன்றி மேனகா.

அதே மேனகா தான்.என்னிடம் இப்ப வாழைக்காய் இருக்கு.செய்துப் பார்த்து சொல்றேன்பா.

விஜி இந்த கோப்தாவை சுரைக்காயில் செய்தேன் சூப்பர்பா.ஆசியாக்காவின் பொட்டட்டோ புலாவ்க்கு செம அருமை.நன்றி விஜி!!

நன்றி மேன்கா. செய்து பார்த்து மறக்காமல் பின்னுட்டம் அளித்தற்க்கு.
நானும் நாளை செய்ய போறேன். இன்று தான் சுரைக்காய் துருவி ப்ரிட்ஜில் வைத்துள்ளேன்.
நன்றி............

இந்த தடவை வாழைக்காயில் செய்தேன்,ரொட்டிக்கு மிக அருமைப்பா.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி விஜி!!