வெங்காயம் தேங்காய் சட்னி

தேதி: February 27, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

வெங்காயம் - 3
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பில்லை - 5 இலை
கடுகு - 1/2 தேக்கரண்டி
அரைக்க வேண்டியவை :
தேங்காய் - 1/2 மூடி
காய்ந்த மிளகாய் - 4


 

முதலில் வெங்காயத்தினை மிகவும் பொடியாக வெட்டி வைக்கவும்.
தேங்காய் மற்றும் காய்ந்த மிளகாயினை மிகவும் சிறிது தண்ணீருடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கிய உடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காயினை இதில் சேர்த்து கலக்கி இறக்கிவிடவும்.
இப்பொழுது சுவையான வெங்காயம் தேங்காய் சட்னி ரெடி.


இந்த சட்னியை சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல் கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா, அடைதோசைக்கு நல்ல மேச் வெங்காய்ம்தேங்காய் சட்னி நல்ல இருந்தது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிகவும் நன்றி மஹா.
நல்ல காம்பினேஷன்…யுவன் எப்படி இருக்கான்? என்னுடைய மெயில் ஐடி geethaggmoorthyஅட் ஜிமெயில். காம். மெயில் செய்யுங்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்