பாசிப்பருப்பு பக்கோடா

தேதி: February 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு -1கப்
வெங்காயம் -1
காய்ந்தமிளகாய் -1
கறிவேப்பிலை -1கொத்து
சோம்பு -1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
பெருங்காயதூள் -1சிட்டிகை
எண்ணை - பொரிப்பதற்கு


 

பருப்பை 2மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம்,கறிவேப்பிலை பொடியாக நறுக்கிவைக்கவும்.
பருப்புடன் சோம்பு,மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கியவெங்காயம்,கறிவேப்பிலை,பெருங்காயபொடி போட்டு நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி சுடவைத்து மாவை பக்கோடாவாக போட்டு சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி உங்களுடைய குறிப்பில் இருந்த பாசிப்பருப்பு பக்கோடா மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

செய்துபார்த்து நன்றாக இருந்தது என்று சொன்னது சந்தோசமாக இருக்கு நன்றி துஷ்யந்தி

சவுதி செல்வி

சவுதி செல்வி