மிக்ஸட் வெஜ் பொரியல்

தேதி: February 28, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டைகோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 ( இரண்டாக கீறிக்கொள்ளவும்)
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 1 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப


 

ஒரு பாத்திரத்தில் அளவாக தண்ணீர் வைத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி இவற்றை உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய்த்துருவல், சீரகம், பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், 1/4 டீஸ்பூன் உப்பு போட்டு வெந்த காய்கலவையை லேசாக வதக்கவும்.
பின்னர் அரைத்தகலவையும் சேர்த்து 1 நிமிடம் கிளறவும் அரைப்பு பச்சைவாசம் போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். எல்லாமும் சேர்ந்து வரும் போது இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்