மட்டன் கடலை பருப்பு குழம்பு

image

வழங்கியவர் : geethaachal

தேதி : ஞாயிறு, 01/03/2009 - 08:52

ஆயத்த நேரம் : 5 நிமிடம்

சமைக்கும் நேரம் : 45 நிமிடம்

பரிமாறும் அளவு : 4

0
No votes yet
Your rating: None
 

 

  • மட்டன் - 1/2 கிலோ
  • கடலைப்பருப்பு - 1 கப்
  • உருளைக்கிழங்கு - 2
  • வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • உப்பு - தேவையான அளவு
  • அரைத்து கொள்ள:
  • தேங்காய் - 1/2 மூடி
  • கசகசா - 1 தேக்கரண்டி
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • கடைசியில் சேர்க்க:
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • எலுமிச்சைப்பழம் - 1

 

  • கடலைப்பருப்பினை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • முதலில் மட்டனை சுத்தம் செய்து குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவிடவும். (மட்டனுக்கு 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து வேகவிடவும்)
  • உருளைக்கிழங்கினை தோல் நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  • பின்னர் உருளைக்கிழங்கு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து உருளைக்கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிடவும்.
  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை போட்டு பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • இப்பொழுது வதக்கி வைத்துள்ள பொருட்களை பிரஷ்ர் குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து கலக்கவும்.
  • அதன் பிறகு இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் 6 - 10 நிமிடம் வேகவிடவும்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த பொருட்களை மட்டனில் சேர்க்கவும். இத்துடன் வேகவைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கினை சேர்த்து கலக்கவும்.
  • இந்த கலவையில் 1 தேக்கரண்டி உப்பு (கடலைப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு சேர்ப்பதால்) சேர்த்து கொள்ளவும். சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
  • கடைசியில் கொத்தமல்லி தூவவும். பரிமாறுவதற்கு சிறிது நேரம் முன்பு இத்துடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கொள்ளவும்.
  • இப்பொழுது சுவையான மட்டன் கடலைப்பருப்பு குழம்பு ரெடி.

Note:

இந்த குழம்பு தஞ்சாவூர் ஸ்பெஷல். உருளைக்கிழங்கினை மற்றும் கடலைப்பருப்பினை மட்டனுடன் சேர்த்து வேகவைத்தால் சுவை மாறுபட்டுவிடும். அதே போல் மட்டனை முதலில் தனியாக தான் வேகவைக்க வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு எற்றது போல உப்பினை சேர்த்து கொள்ளவும்.