பச்சைபட்டாணி பொரியல்

தேதி: March 2, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை பட்டாணி - 1 1/2 கப்
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
அரைக்க :
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 1 பல்
சின்ன வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப


 

பட்டாணியை அளவாக தண்ணீர் விட்டு 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் தூவி உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய்த்துருவல், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், 1/4 டீஸ்பூன் உப்பு போட்டு அரைத்த கலவையும் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
அரைத்த கலவையில் பச்சைவாசம் போனதும், வெந்த பட்டாணியை போட்டு கிளறி விடவும்.
எல்லாமும் சேர்ந்து வரும்போது கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.


பச்சை பட்டாணி கிடைக்க வில்லை என்றால் காய்ந்த பட்டாணியை முந்தினமே ஊறவைத்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஹா, இந்த பட்டாணி பொரியல் செய்வதற்கு வித்தியாசமாகவும், மிகவும் நன்றாக இருந்தது. நான் ஃப்ரோஸன் பட்டாணியில் செய்ததால் முதலில் வேக வைக்கவில்லை.நன்றி உங்களுக்கு.

ஹாய் மகா இன்று உங்கள் பட்டாணி பொரியல் செய்தேன். மிகவும் நன்றாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.