ஐஸ்கிரீம் குச்சியில் போட்டோ ப்ரேம் செய்வது எப்படி?

தேதி: March 2, 2009

4
Average: 3.3 (6 votes)

 

ஐஸ் கீரிம் குச்சி (ice cream strick) - 42
தெர்மாக்கோல் சீட் (thermocol sheet)
வெல்வெட் பேப்பர் (velvette paper)- சிவப்பு நிறம்
சாமி சிலை - 1
இட்லி மணி
விளக்கு - 2
தோரணம் - 2
பன்னீர் தட்டு - 1
பழங்கள் தட்டு - 1
பெல் - 2
கத்திரிக்கோல்
பெவிக்கால்
ப்ளேடு

 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அருங்கோணம் வடிவத்திற்கு தெர்மாக்கோல் சீட்டை வெட்டிக் கொள்ளவும். இதே போல் வெல்வெட் பேப்பரையும் அருங்கோண வடிவிற்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சாமி படத்தை நடுவில் வைத்து தேவையான அளவு இடைவெளி விட்டு ஐஸ்கிரீம் குச்சியை அருங்கோணம் வடிவில் வைத்து அடுக்கிக் கொள்ளவும்.
ஒரு குச்சியை வைத்த பிறகு அடுத்த குச்சியை வைக்கும் போது முதல் குச்சியின் முனையில் இரண்டாவது குச்சி மேலே இருக்கும் படி வைத்து பெவிக்காலால் ஒட்டி விடவும். இதே போல் ஆறு பக்கங்களிலும் ஒட்டி விடவும்.
அடுத்த வரிசையை மேலே வைக்கும் போது முதலில் வைத்த குச்சியில் சற்று தள்ளி வைக்கவும். இதே போல ஏழு வரிசைகள் வைக்க வேண்டும். பார்ப்பதற்கு படிகட்டு போல இருக்கும்.
தெர்மாக்கோல் சீட்டின் மேல் சிவப்பு வெல்வெட் பேப்பரில் பெவிக்கால் தடவி ஒட்டவும்.
அதன் பிறகு அடுக்கி வைத்திருக்கும் ஐஸ்கிரீம் குச்சியில் பின்புறம் பெவிக்கால் தடவி சிவப்பு வெல்வெட் பேப்பர் ஒட்டிய தெர்மாக்கோல் சீட்டில் வைத்து ஒட்டவும்.
சாமி சிலையில் பின்புறத்தில் பெவிக்கால் தடவி தெர்மாக்கோல் சீட்டின் நடுவில் ஒட்டவும்
விளக்கு, பழங்கள் தட்டு, பெல், தோரணம் மற்றும் இட்லி மணி வைத்து அலங்கரிக்கவும்.
இந்த அழகிய ஐஸ்க்ரீம் குச்சியில் செய்யக்கூடிய போட்டோ ப்ரேமை செல்வி. வைஷ்ணவி அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் இருந்த அதீத ஆர்வத்தினால் முறையாக பயிற்சி பெற்று இதுப் போல பல விதமான கைவினைப் பொருட்களை செய்துள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் ரொம்ப நல்லா இருக்கு...... ஐஸ்கிரீம் குச்சியில் போட்டோ ப்ரேம்....ஆனா இதை எப்படி மாட்டறது?...பின் பக்கம் எதாவது மாட்ட ஒட்டனுமா?

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

வைஷூ சூப்பர். என்னிடம் பேபி கிருஷ்னா இருக்கார் செய்திட்டு சொல்கிறேன்.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக்க அழகாக இருக்கிறது வைஷ்ணவி. பாராட்டுக்கள். :-) நீங்கள் பயன்படுத்தியிருக்கும் எம்பலிஷ்மன்ட்ஸ் இங்கு கிடைக்குமோ தெரியவில்லை. கிடைத்ததும் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.
இமா

‍- இமா க்றிஸ்

என்னிடமும் ஒரு சரஸ்வதி இருக்கிறா.கோயிலில் தந்தார்கள் கடவுள்படம் இதற்கு நன்றாக பொருந்துகிறது.அதனால் செய்து பார்க்கிறேன்.
இவ்ளோ குச்சிக்கு இவ்ளோ ஐஸ்கிறீம் குடிக்கவேனும் என்று நினைத்தேன் .பிறகுதான் பார்த்தால் பாக்கெட்டில் கடையில் விக்கிறார்கள்.அழகாக இருக்கிறது.இன்றே செய்துவிட்டு சொல்கிறேன்.

சுரேஜினி

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ஃபோட்டோ ப்ரேம். என்னிடமும் ஒரு பேபி கிருஷ்ணா படம் இருக்கு. ட்ரை பண்ணி பார்க்கணும். ஆனால், மத்த படி அந்த விளக்கு, தோரணம் எல்லாம் இங்க கிடைக்காது. இருப்பதைக்கொண்டு செய்துபார்த்து சொல்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

வைஷ்ணவி,
உங்கள் போட்டோ பிரேம் மிக மிக அழகு. இன்னும் பல செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
செபா.

தெர்மாக்கோல்சீட்,இட்லிமணி என்றால் என்ன ? அது எப்படியிருக்கும் அதற்கு வேறு பெயர்கள் இருக்கிறதா? தயவு செய்து எனக்கு விளக்கம் தரவும் அத்துடன் நீங்கள் செய்த பிரேம் நன்றாக இருக்கிறது மேலும் அழகான பொருட்கள் செய்து உங்களுடைய திறமையை காட்ட எனது வாழ்த்துகள்
இப்படிக்கு
துஷ்யந்தி

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

தெர்மாகோல் - ரெஜிஃபோம் (பாக்கிங் ஷீட்).
இட்லி மணி - பார்க்கக் குழந்தைகளின் கிலுகிலுப்பைகளில் இருப்பதுபோல் தெரிகிறது.
நானும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். வைஷ்ணவி வந்து விளக்கினால் உதவியாக இருக்கும்.
நன்றி
இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta