உருளை மசாலா குழம்பு

தேதி: March 2, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை பட்டாணி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
மிளகாய் தூள் - இரண்டரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
தனியாக அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைகரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - கால் கப்
பட்டை - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு


 

உருளைக்கிழங்கு தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள்.
பச்சை பட்டாணி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள்.
பொட்டுக்கடலை, தேங்காயைத் தனியாக அரையுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, பட்டை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
பிறகு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு வேகும் வரை கொதிக்க விடுங்கள்.
பிறகு அரைத்த தேங்காய் விழுதை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள்.
கைவிடாமல் கிளறி, 5 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மைதிலி அக்கா இன்று இரவு சப்பாத்திக்கு அருமையான உருளை குழம்பு உங்கள் செய்முறையில் அருமையாக இருந்தது மிக்க நன்றி....

உருளை மசாலா குழம்பு இன்று செய்தேன்.நன்றாக இருந்தது.சப்பாத்திக்கு கூட நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.தங்களின் 2 இன் 1 குறிப்புக்கு நன்றி.

ஹாய் சுகன்யா,
எப்படி இருக்கீங்க?உருளை மசாலா குழம்பு சப்பாத்திக்கு,பூரிக்கு,எல்லாத்துக்கும் மிக சுவையாக இருக்கும். பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி பாபு நலமா? இன்று தான் உங்களுடன் முதல் முறையாகப் பேசுகிறேன்.
இன்று உங்கள் உருளை மசாலா குழம்பு செய்தேன்.ரொட்டியுடன் சாப்பிட்டேன் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

உருளை மசாலா குழம்பு..... மிகவும் நன்றாக இருந்தது மைதிலி. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வத்சலா,
நான் நலம்.நீங்க எப்படி இருக்கீங்க?
ரொம்ப சந்தோஷம் என்னிடம் பேசினது பா. பின்னூட்டம் அனுப்பியதற்கு
மிகவும் நன்றி.

ஹாய் வனிதா,
எப்படி இருக்கீங்க? பின்னூட்டம் அனுப்பியதற்கு
மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி நலமாப்பா? சுஜித்தும், அபிஷேக்கும் நலமா? உருளை மசாலா குழம்பு செய்தேன், ரொம்ப நல்லாயிருந்துச்சு, பாஸ்கர் விரும்பி சாப்பிட்டார். மிக்க நன்றிப்பா.

அன்புடன் :-)
உத்தமி :-)

உத்தமி நான் மற்றும் சுஜித்,அபிஷேக் நலம் பா.
மிகவும் நன்றி.அப்படியா? பாஸ்கர் விரும்பி சாப்பிட்டாரா ரொம்ப சந்தோஷம் பா.
பின்னூட்டம் கொடுத்தற்கு மிகவும் நன்றி .

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி,
இன்று உங்க உருளை மசாலா குழம்பு செய்தேன். புலாவ் ரைஸ் செய்து அதனுடன் சேர்த்து சாப்பிட்டோம். ரொம்ப டேஸ்ட்டியாக இருந்தது. என் சித்தி ஒரு குழம்பு ‘குருமா குழம்பு’ என்று வைப்பார்கள், எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த குழம்பும் அதேபோன்ற சுவையில் நன்றாக இருந்தது. மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் சுஸ்ரீ,
ரொம்ப சந்தோஷம் பா.பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb