கடைந்த கத்தரிக்காய்

தேதி: March 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் -2
வெங்காயம் -1
தக்காளி -1
பச்சைமிளகாய் -1
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
சாம்பார்பொடி -1ஸ்பூன்
கறிவேப்பிலை -1கொத்து
உப்பு -தேவையான அளவு
தாளிக்க:
எண்ணை -1ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்


 

கத்தரிக்காயை கழுவி மைக்ரோவேவ் ஓவனில் 2நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.நன்கு பிசைந்துவைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
தக்காளி போட்டு வதக்கி,பிசைந்த கத்தரிக்காய் போட்டு வதக்கி ,மஞ்சள்பொடி,சாம்பார்பொடி போட்டு வதக்கி,உப்பு போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவிடவும்.
வெந்ததும் மத்தினால் நன்றாக கடையவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்…எனக்கு சாப்பிட ஆசையாக இருக்கு..இதோ மாவினை ஊறவைத்திட வேண்டியது தான்….இட்லியுடன் சாப்பிட..
அன்புடன்,
கீதா ஆச்சல்

இது எனக்கு ரொம்ப பிடித்தமானது. இட்லியுடன் சாப்பிட நல்லா இருக்கும். செய்து சாப்பிட்டு சொல்லுங்கோ.

சவுதி செல்வி

அன்புள்ள செல்வி
கத்திரிக்காயை மைக்ரோவேவ் அவனில் வேக வைப்பது முலுதாக வைக்கனுமா அல்லதி கீறி வைக்கனுமா.கொஞ்சம் சொள்ளுங்களேன்.

அன்புடன் பர்வீன்.

கத்தரிக்காயை கழுவிட்டு முழுதாகவே வைக்கலாம்.நன்றாக வெந்துவிடும். காரலிருக்காது.
செல்வி

சவுதி செல்வி

அன்புள்ள செல்வி
உங்கள் உடன் பதிலுக்கு மிகவும் நன்றி.கத்திரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும்.செய்து பார்த்து சொல்கிறேன்.
அன்புடன் பர்வீன்.

செல்வி நேற்று கடைந்த கத்திரிக்காய் செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது.நான் எப்போதும் கத்திரிக்காய் சுட்டுதான் செய்வேன். மைக்ரோவேவில் வைத்து செய்ய ரொம்ப ஈசியா இருந்தது. நன்றி செல்வி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானும் முன்பெல்லாம் சுட்டுதான் செய்வேன்.மைக்ரோவேவில் வைத்துசெய்துபார்க்கலாம் என்று ட்ரைபண்ணினேன் நன்றாக இருந்தது.பின்னூட்டம் குடுத்ததுக்கு நன்றி

சவுதி செல்வி

சவுதி செல்வி