தேங்காய் சாதம்

தேதி: March 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
இஞ்சி - ஒரு துண்டு பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
பச்சைமிளகாய் - பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - 6 இலைகள்
முந்திரிப்பருப்பு - 6 பொடியாக நறுக்கியது
தேங்காய் துருவல் - 1/2 கப்


 

எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரே ஒரு நிமிடம் வதக்கவும்.
எதுவும் நிறம் மாற தேவையில்லை. பிறகு தீயை அணைத்து விட்டு உடன் தேங்காய் துருவல் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்


இதற்கு வறுவல் வகைகள் நல்ல காம்பினேஷன். இதில் வெங்காயம், இஞ்சி யெல்லாம் அதிகம் வதங்காமல் கொஞ்சம் கரகரவென கடிக்கும் அளவு வதக்கினால் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா,

தேங்காயை வறுக்க வேண்டுமா இல்லை அப்படியே சேர்க்கனுமா?? எங்கள் வீட்டில் தேங்காயையும் சேர்த்து வறுத்து சாதத்துடன் சேர்ப்போம்.

MS. Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இல்லை தோழி
நான் பச்சை தேங்காய் துருவலை தான் சேர்க்கிறேன்

உங்கள் தேங்காய் சாதம் செய்தென் மிகவும் அருமையாக இருந்தது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

நன்றி ப்ரியா..
மிக்க மகிழ்ச்சி ப்ரியா..தொடர்ந்து அறுசுவை குறிப்புகளை செய்து பாருங்கள்