ரோலி போலி பிஸ்கட்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 150 கிராம்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை பொடித்தது - 30 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணெய் - 75 கிராம்
பால் - அரை கப்
ஜாம் - 4 தேக்கரண்டி


 

மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவைகளை ஒன்றாகச் சேர்த்து இருமுறை சலிக்கவும்.
வெண்ணெயை சலித்த மாவுடன் சேர்த்து லேசாக விரல் நுனிகளால் கலந்து, பொடி செய்த சர்க்கரையை சேர்க்கவும்.
பால் சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாக பிசையவும். மாவை நீண்ட அப்பளமாக இட்டுக் கொள்ளவும்.
மேலே ஜாமை சிறிது சூடு செய்து சமமாகத் தடவிக் கொள்ளவும். பாய் போல் சுருட்டிக் கொள்ளவும்.
380 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
பேக் ஆனவுடன் குறுக்கு வாட்டில் வெட்டி, சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்