Home pragnancy test

Hi Friends எத்தனை நாட்களின் பின் Home pragnancy test செய்ய வேண்டும்? ஆனாலும் பீரியட் வரும் நேரத்தில் உள்ள மாதிரி வயிற்று வலி இருந்து கொண்டே உள்ளது.

Please friends, ஏன் பதில் தர மாட்டேங்கிறீங்க?

http://www.arusuvai.com/tamil/forum/no/11402
http://www.arusuvai.com/tamil/forum/no/11797
http://www.arusuvai.com/tamil/forum/no/9987
http://www.arusuvai.com/tamil/forum/no/9730

சுரேஜினி

Thanks Sarojini, I am new for this site. that's why I've put new question. Atleast ஒரு wish தர மாட்டீங்களா Sarojini எனக்கு?

வணக்கம் வந்தனம் ஸ்வாகதம் நைலா..வயிற்று வலி இருக்கும்

Thalika, என்ன சொல்லியிருக்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை.

ஓஹ் உங்க பேர் நல்லாவோ.வந்தனம் சொன்னேன் வேறொன்ருமில்லை.
வயிற்று வலி கர்பகாலத்திலும் இருக்கும்

நீங்கள் புதிதா .உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.
அடுத்து நல்லதே நடக்கும் கவலை வேண்டாம் என் வாழ்த்துக்கள்.நான் இப்படியான கேள்விகளைக்கண்டால் எந்த அவசரத்திலும் பதில்போடுவேன்.அதனால்தான் உங்களுக்கு தேவையான விபரம் மட்டும் தந்தேன்.மன்னிக்கவும் நல்லா.
நீங்கள் கர்ப்பத்துக்கு ஆயத்தமாகவோ,கர்ப்பமாகவோ இருக்கிறீர்கள் என்றால் மன்றத்தில் கர்ப்பிணிகள் பக்கத்தை ஒன்றுவிடாமல் படியுங்கள்[கொஞ்சம் கொஞ்சமா].அவ்வளவும் இங்குள்ளவர்களின் சொந்த அனுபவத்தில் இருந்து வரும் பதில்கள்.எங்கேயோ வெட்டி இங்கு ஒட்டுபவை அல்ல.
உங்கள் எண்ணம்போல் தாயாகி அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னுடைய பிரார்த்தனைகள்.

ஆரம்ப கர்ப்பகால வயிற்றுவலியும் பீரியட் க்கு உள்ளதைப்போலவே இருக்கும்.

அன்புடன் நல்லா நான் வைத்திருக்கும் சொத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என் பெயர்தான்.அதனால்தான் மேலே ஆங்கிலத்திலும் கீழே தமிழிலும் எழுதி வைத்திருக்கிறேன்.
சரோஜினி எனக்குத்தெரிந்த ஒரு பாட்டியின் பெயர்.நல்ல பாட்டி என்றாலும் பரவாயில்லை அதுவும் சிடுமூஞ்சிபாட்டி.

சுரேஜினி

Sorry Surejini, தவறாக மாற்றி போட்டு விட்டேன். Plz என்னை மன்னித்து விடுங்கள். home pregnancy செய்து பார்த்தேன். Negative தான் வந்தது. மிகவும் கவலையாக உள்ளது.

கவலை படாதீங்க நல்லா..இதெல்லாம் சகஜம் தான்..நாங்க எல்லோருமே பல தடவை டெஸ்ட் பன்னி ஏமாந்து பிறகு குழந்தை கிடைத்தவர்கள் தான்...மனதை குழப்பிக் கொள்ளாமல் சந்தோஷமாக இருங்கள்..கட்டாயம் நல்ல செய்தி சொல்வீர்கள்.
உடம்பை சரியான எடையில் வைத்து கொள்ளுங்க.தினம் வாக்கிங் போங்க,சந்தோஷமா இருங்க.

நான் Home pregancy test செய்து பார்த்தேன் பாஸிட்டிவ் ஆக வந்தது. நான் எப்பொழுது டாக்டரிடம் செல்வது. நான் ஆபிஸிற்கு வேனில் வந்து செல்வேன். நான் என்னென்ன சாப்பிடலாம். பதில் கூறுங்கள் தோழீகளே......

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்