வெண்டைக்காய் வதக்கல்:

தேதி: March 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய்- அரை கிலோ
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
சாம்பார்ப் பொடி- 1 ஸ்பூன்
சோம்பு- அரை ஸ்பூன்
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த வெங்காயம்- 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
மெலியதாக சீவிய பூண்டிதழ்கள்- 5
பொடியாக அரிந்த கொத்தமல்லி- 3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு


 

வெண்டைக்காயைப் பொடியாக அரியவும். வாணலியில் அரிந்த வெண்டைக்காயைப் போட்டு சூடாக்கவும். சிறிது சிறிதாக எண்னெய் விட்டு வதக்கவும். மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்து கிளறவும். பின் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பூண்டு இவற்றை சிறிது சிறிது இடைவெளி விட்டுச் சேர்த்து கிளறியவாறே இருக்கவும். முக்கால்வாசி வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறவும். வெண்டைக்காய் பதமாக வெந்ததும் இறக்கவும்.


விரும்பினால் சிறிது தேங்காய்த்துருவல் வெண்டைக்காய் வெந்தபின் தூவி இறக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ மேடம் நேற்று உங்க வெண்டைக்காய் வத‌க்கல் செய்தேன் நன்றாக் இருந்தது, சாம்பாருக்கும், தயிர் சாதத்துக்கும் நன்றாக இருந்தது.நன்றி மேடம்.

வெண்டைக்காய் வதக்கல் செய்தேன் நன்றாக இருந்தது.

அன்புள்ள விஜி!

வெண்டைக்காய் வதக்கல் நன்றாக இருந்ததென்ற தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் மகிழ்வான நன்றி!!

மனோ மேடம், இந்த வதக்கலை செய்தேன். தயிர் சாதத்துடன் அருமையாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

அன்பு சகோதரி மனோ அவர்களுக்கு,

நேற்று வெண்டைகாய் வதக்கல் செய்தேன் மிகவும் அருமை. நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126