காரட் பாயசம்

தேதி: March 4, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - 250 கிராம்
பால் - 500 மி.லி
சீனி - 100 கிராம்
பாதாம் பருப்பு - 10 கிராம்
கேசரிப்பவுடர் - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
நெய் - 30 கிராம்


 

காரட்டை துருவிக் கொள்ளுங்கள்.
பாதாம் பருப்பை சிறிது பால் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, அது காய்ந்ததும் காரட்டைப் போட்டு வதக்கவும்.
காரட் சிறிதளவு வதங்கியதும் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
சிறிது நேரத்தில் சீனி, பாதாம் பருப்பு விழுது, ஏலக்காய், கேசரிப்பவுடர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பதமாக வந்த பின்பு இறக்கி பரிமாறவும்.


விரும்பினால் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்