ஸ்டஃபிடு ஆப்பம் (குழந்தைகளுக்கு)

தேதி: March 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. ஆப்ப மாவு (அ) வட்டயப்ப மாவு - 2 கப்
2. தேங்காய் துருவல் - 1 கப்
3. முந்திரி, திராட்ச்சை (அ) விருப்பமான நட்ஸ் வகை - 1/2 கப்
4. சர்க்கரை ருசிக்கு
5. நெய் (அ) எண்ணெய்


 

ஆப்ப மாவாக இருந்தால் உடன் சிறிது சர்க்கரை சேர்த்து கலக்கவும். வட்டயப்ப மாவு என்றால் அதிலேயே சர்க்கரை இருக்கும், சேர்க்க தேவை இல்லை.
நட்ஸ் வகைகளை நெய் விட்டு வறுக்கவும், கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளரி எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே இத்துடன் சர்க்கரை சேர்த்து வைக்கவும்.
வழக்கத்தை விட சின்னதாக ஆப்பம் சுடவும்.
இதன் நடுவில் கொஞ்சம் தேங்காய் துருவல் வைத்து மசால் தோசை மடிப்பது போல் மடிக்கவும்.
சுவையான ஆப்பம் தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


விரும்பினால் ஏலக்காய் பொடித்து சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்