தேங்காய் வெல்ல பிஸ்கட்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 150 கிராம்
வெண்ணெய் - 70 கிராம்
சர்க்கரை பொடித்தது - 20 கிராம்
குளிர்ந்த தண்ணீர் - கால் கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
உள்ளே நிரப்புவதற்கு:
வெல்லச் சர்க்கரை - 30 கிராம்
துருவிய கொப்பரை - 30 கிராம்
வெண்ணெய் - 25 கிராம்


 

மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து இருமுறை சலிக்கவும்.
மைதாவுடன் வெண்ணெய் சேர்த்து ரொட்டித்தூள் போல் ஆகும் வரை விரல் நுனிகளால் கலக்கவும்.
சர்க்கரையைச் சேர்க்கவும். குளிர்ந்த தண்ணீரை சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல பிசையவும்.
சுமார் 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
உள்ளே நிரப்ப:
மாவை நீண்ட சதுர அப்பளமாக இட்டுக்கொள்ளவும். வெண்ணெயை மேலே தடவவும்.
வெல்லச் சர்க்கரை கொப்பரைத் துருவல் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்.
இதை வெண்ணெய் தடவிய டின் மேல் தூவிக் கொள்ளவும். அப்பளத்தை மடித்துக் கொள்ளவும்.
நான்கு ஓரங்களையும் நன்றாக ஒட்டிவிடவும்.
அப்பளக் குழவியை இலேசாக மேலே உருட்டிக் கொள்ளவும்.
ஒரு அங்குல அகலம், இரண்டு அங்குல நீளத்திற்கு வெட்டி 400 டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்