சிக்கன் பேக்ட் பாஸ்தா

தேதி: March 4, 2009

பரிமாறும் அளவு: 2-4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பாஸ்தா - 2 கப்
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 1கப்
செடார் சீஸ் - 100 கிராம்
சூப் க்யூப்- 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
குடை மிளகாய் - சிறியது 1
மஞ்சள் - 2 பின்ச்
சீரகம் பவுடர் - 2பின்ச்
மிளகு பவுடர் - 2 பின்ச்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிது.


 

முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்கவும்.
சிக்கன் சிறிய துண்டுகளாக கட் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்கவும்.தக்காளி,வெங்காயம்,கொடை மிளகாய் ,மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி,இஞ்சிபூண்டு,தக்காளி,சிக்கன் ,மஞ்சள்,சீரகம்,மிளகு,உப்பு சிறிது போட்டு வெந்தவுடன் ,கொடை மிளகாய் போட்டு கிளறி இறக்கவும்.சிக்கனில் நீர் இருந்தால் அதனுடன் உபயோகிக்கவும்.
பின்பு பைரக்ஸ் போன்ற பேக்கிங் பவுலில் எண்ணெய் சிறிது தடவி பாஸ்தா,வேக வைத்த சிக்கன்,பொடித்த சூப் கியுப்,அதன் மேல் செடார் சீஸ் போட்டு முற்ச்சூடு படுத்தப்பட்ட அவனில் 200 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.லேசாக சீஸ் சிவறும் போது எடுக்கவும்.மல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான கிரீமி சிக்கன் பேக்ட் பாஸ்தா ரெடி.


இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பிட்ஸா ஹட்டில் இது ஒரு ரெசிப்பியாகும். நான் சாஸ் எதுவும் விடாமல் ட்ரை பண்ணியது. இது போல் வெஜ் பேக்ட் பாஸ்தாவும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா அக்கா பாஸ்தா என்றால் என்ன?

பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபாதாமு எப்படி இருக்கீங்க உங்க சிக்கன டிப்ஸ்க்கு நன்றி!!! பல த்ரெட்லயும் என் குழந்தை பற்றி விசாரித்து இருக்கீங்க. பிறக்கும் போது ( அது எப்பவோ????!!!) அப்ப ஃப்ரபா ஆன்டி விசாரிச்சாங்கன்னு சொல்லறேன் ஓகேவா :)) பாஸ்தா என்பது என்ன என்று தெரிய கூகிளில் pasta என்று தேடுங்க.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா அக்கா நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கிங்கலா..... நான் தெரிஞ்சுக்காதான் கேட்டேன் அக்கா. நான் எல்லார் கிட்டையும் கேக்காரமாதிரி கேட்டேன். உங்கலுடைய மனதை கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்க்கவும். விரைவில் உங்கலுக்கு குழந்தை கிடைக்கா வாழ்த்துக்காள்.

"வாழக வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பாஸ்தா வெர்மிசில்லி (சேமியா செச்ஷனில்) இருக்கும்,இது பல சேப்பில் இருக்கும்.எல்போ சேப்,போ சேப்,சிலின்டர் இப்படி பல மாதிரி சேப்பில் இருக்கும்.மக்ரோனி என்று கூட சொல்வோமே,ingredient - கோதுமை அல்லது மைதா மாவு ,முட்டை,தண்ணீர் சேர்த்து செய்ததுன்னு நினைகிறேன்.இது இத்தாலியர்கள் விரும்பி உண்ணும் உணவு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா நீங்க உங்க பிள்ளைகள் நல்லா இருக்கிங்கலா. நான் இலா அக்கா சென்னமாதிரி கூகுல்ல பார்த்தென். அதை மக்ரேனின்னு செல்லுவாங்க. அதனால்தான் கேட்டேன். ஒருவேளை நான் தாப்பா பார்த்துட்டேனேன்னு கேட்டேன். இன்னிக்கு கடைக்கு போய் நான் வாங்கைவந்து செய்கிரேன். நன்றிக்கா...

சூப் கியுப் என்றால் என்னக்கா?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேகி,நார் சூப் ஸ்டாக் என்ற பெயரில் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்ஸில் கிடைக்கும்.இதில் சிக்கன்,வெஜ்,மட்டன் ஸ்டாக் கூட இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.