ஆறு மாத குழந்தை toilet போய்க்கொண்டிருக்கின்றான். pls help me

என் ஆறு மாத குழந்தை தண்ணி மாதிரி இரண்டு மனிநேரத்துக்கு ஒரு முறை போய்க்கொண்டிருக்கின்றான். தாய்பால் தான் கொடுத்தேன். மேலும் similac paalum கொடுத்தேன். pls yaravathu enna seiyvathu sollungal.

அன்பு ஷகீலா,
சிமிலாக் பால் மருத்துவரின் ஆலோசனை கேட்டு கொடுத்தீர்களா? எத்தனை நாட்களாக கொடுக்கிறீர்கள்? முதலில் அந்த பாலை நிறுத்துங்கள் (தற்காலிகமாகவாவது).
உங்களிடம் கசகசா இருக்கிறதா? அரை தேக்கரண்டி அளவு வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, நன்கு அரைத்து,குடிக்கும் அளவுக்கு கலக்கி குழந்தைக்கு புகட்டுங்கள். மூன்று வேளை கொடுக்கலாம். பொட்டுக்கடலையை பொடி செய்து ஒரு டம்ளர் நீரில் 2 தேக்கரண்டி அளவு கரைத்து, கொதிக்க வைத்து திக்காக இல்லாமல் பாட்டிலில் குடிக்கும் பதத்திற்கு சர்க்கரை சேர்த்து குடிக்க கொடுங்கள்.
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து ஒரு சிட்டிகை உப்பும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் கலந்து குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருங்கள். நிறைய தண்ணீர் குடிக்க கொடுக்கணும்.
வேறு ஏதும் வேணா கேளுங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் வேறெதுவும் கொடுக்க கூடாது..அதிலிருந்து தான் இன்ஃபெக்ஷனே ஆகியிருக்கும் அதனால் அது கொடுக்க கொடுக்க கூடிக் கொண்டே இருக்கும்.
அதுவே கொஞ்சம் 6 மாதம் போன பிள்ளைகளுக்கு அரிசி கஞ்சி மட்டுமே வயிற்றுப்போக்குக்கு கொடுக்க வேண்டும்..தாய்ப்பாலல்லாதவைகளை தவிர்த்து விடுதல் நல்லது..
1 வயதுக்கு மேல் தான் தேன் கொடுக்க வேண்டும் என்பார்கள் இருந்தாலும் விரும்பினால் தேனை 1 சொட்டு நாக்கில் தினம் இரண்டி வேளை தடவ கொஞ்சம் பலன் தெரியு
மேலே செல்வியக்கா சொன்ன வைத்தியமும் நல்ல பலன் கொடுக்கும்

ஹாய் ஷகிலா கவலை வேண்டாம் எல்லா குழந்தைகலுக்கும் இந்த வயதில் வருவது தான்
பல் முளைக்க ஆரம்பிக்கும் போது எல்லாத்தையும் கடிக்கனும் போல் இருக்கும் அப்போதூ எதையாவது எடுத்து வாயில் போட்டு இருப்பார்கள்.

1. செல்வி அக்கா சொன்ன மாதிரி செய்யுங்கல்.
2. குளுல்=க்கோஸில் ஒரு பின்ச் உப்பு போட்டு கொடுங்கள்
அது சத்திழந்து கிடக்கும் உங்கள் குழந்தைக்கும் கொஞ்சம் தெம்பை கொடுக்கும்.
3. அரோட் மாவு கஞ்சி காய்ச்சி கொடுக்கனும், அரோட் மாவு பிஸ்கேட் கொடுக்கனும்.
இல்லையா கவலை வேண்டாம் கோதுமை களி காய்ச்சி கொடுங்கள் சிறிது பசி தாங்கும் குழந்தைகள் சாப்பிடவே பயப்படும்.

4.நெஸ்டம் கிடைத்தால் அதை வெரும் ஆறிய வென்ண்ணீரில் காய்ச்சி கொடுங்கள்.
ஜலீலா

5. ஒரே பேதி ஆனதன் தொடை எல்லாம் புண்ணாகி இருக்கும் காட்டன் சேலைஅயி கிழித்து அதை கட்டுங்கள்,
நிறிஅய பேபி ஆயில் (அ) தேங்காய் எண்ணையை தேய்த்து விடுங்கள்
6.முதலில் நல்ல சாப்பிட்டு கொள்ளுங்கள் அப்ப தான் குழந்தையை கவனிக்க முடியும்.

ஜலீலா

Jaleelakamal

யாரவது ஜீவா கிர்ஷ்ணனுக்கு இந்த பதிலை அங்கே போடவும்
ஆம் தண்ணீர் குடிக்க கூடாது தான் ஆனால் இப்ப தான் நிறைய தண்ணீர் குடிக்கனும் போல் இருக்கும்

மட்டன் எலும்பு சூப் தண்ணீர் மாதிரி செய்து நிறைய குடிங்க மாலை 7 மணிக்கு மேல் குடிக்கவே கூடாது கொஞ்சம் ஒரு மூடி அளவு ஒகே, இலலி வெத்தலை பாக்கு போஒடு அந்த ஜூஸை முழுங்குங்கள்,காலையில் இருந்து மாலை வரை தண்ணீர் குடிக்கலாம்
அப்படியும் தாக அடங்க வில்லையா சோடா வாங்கி சிறிது குடித்து கொள்ளலாம்.
ஜலீலா

Jaleelakamal

வணக்கம்
தாய்பாலை நிறுத்த வேண்டாம்.நீங்கள் பத்தியம் இருந்து பால் கொடுத்தால் போதும்.similacகொடுத்த உடனேdiarrhea என்றால், அதை உடனே நிறுத்தவும்.சில மாதங்களாகவே similacகொடுத்துக்கொண்டிருந்தால்,நிறுத்த வேண்டாம்.formula (powder milk )will control diarrhea.pedialyte கொஞ்சம் கொஞ்சம் கொடுங்கள்.doctors அதைதான் recommend பண்ணுவாங்க..இது வருவது normal தான்.பச்சை கலர்ல toilet போனா மட்டும்,similac யை தவிர்க்கவும்.அந்த கலர் rota virusஇன் தாக்குதலால் வருவது.இது ஒரு சில குழந்தைகளுக்கு வரும்.இதுவும் normal தான்.dont worry.dehydrate ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.அதுதான் முக்கியம்.normal ஆ யெப்பொதும் போல அட்க்கடி urine போராலான்னு பார்த்துக்கொள்ளுங்கள்.urine போவது ரொம்பவும் குறைந்து, உதடு வறட்சியாக இருந்தால்,இந்த அறிகுறி யெல்லாம் dehydrate ஆவதற்காக.உடனே மருத்துவரை அனுகவும்.

மிக்க நன்றி செல்வி ,ஜலீலா,தலிகா அக்கா மற்றும் கவி.

தற்போது என் குழந்தை நலமாக இருக்கின்றான். பாலை நிறுத்தியுள்ளேன். பொட்டு கடலை மாவை கஞ்சி காய்த்துக் கொடுத்தேன், தண்ணீரில் உப்பு சக்கரை சேர்த்து கொடுத்தேன்.

செல்விமா உடன் பதில் தந்ததற்க்கு நன்றி

ஜலிலா அக்கா நீங்கள் சொன்ன மாதிரி எதை பார்த்தாலும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறான்.

தலிகா அக்கா பதில் கொடுத்தத்ற்க்கு நன்றி. உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை நலமா.

கவி நன்றாக போகின்றான்.

மிக்க நன்றி செல்வி ,ஜலீலா,தலிகா அக்கா மற்றும் கவி.

தற்போது என் குழந்தை நலமாக இருக்கின்றான். similac பாலை நிறுத்தியுள்ளேன். பொட்டு கடலை மாவை கஞ்சி காய்த்துக் கொடுத்தேன், தண்ணீரில் உப்பு சக்கரை சேர்த்து கொடுத்தேன்.

செல்விமா உடன் பதில் தந்ததற்க்கு நன்றி

ஜலிலா அக்கா நீங்கள் சொன்ன மாதிரி எதை பார்த்தாலும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறான்.

தலிகா அக்கா பதில் கொடுத்தத்ற்க்கு நன்றி. உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை நலமா.

கவி நன்றாக urine போகின்றான்.

அன்பு ஷகிலா,
குழந்தைக்கு குணமானது கேட்டு சந்தோஷமாக இருக்கு. கொஞ்ச நாளைக்கு குழந்தையை ரொம்ப ஜாக்கிரதையாக கவனிச்சுக்கோங்க. வயிற்றுப்போக்கு வந்தாலே வயிறு புண்ணாகி விடும்.
கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் நிறைய குடிக்க கொடுங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்