ஜெயந்தி மாமி....அங்கே த்ரட் ஓபன் ஆக லேட்.. அதான்... இங்க

வணக்கம் மாமி... நல்லா இருக்கீங்களா??? எல்லாம் எப்படி போகுது???? உங்க பையன் mba தானே... நல்லது.... ம்ம்ம்ம்...

தற்கால இளைஞர்கள் பழைய கலாசாரத்திற்கு மீண்டும் வர விரும்புகிறார்களா? அப்படி என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்?....

கண்டிப்பா வர விரும்புறாங்க.. நானும் அந்த வர விரும்புவர்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.....

காரணம் இப்போதைய கலாச்சாரத்தை காட்டிலும் பழையது சிறந்தது... உகந்தது... அதற்க்காக இப்போதைய நிலையை குறை சொல்ல மாட்டேன்.... ஏனென்றால் இப்போதைய நிலையை உருவாக்கியது நாம் தான்...

உங்கள் கேள்விக்கு விடை சொல்லி விட்டேன்... இப்போது என்னோட மொக்கை பிரசங்கத்தை ஆரம்பிக்கட்டுமா???...

முதலில் கலாச்சாரம் என்றால் என்ன???? நாகரீக வளர்ச்சியின் விளைவாய் மாறும் வாழ்வியல் என்று சொல்ல முடியுமா?... அப்படி என்றால் நாகரீக வளர்ச்சி என்றால் என்ன??? (டேய் அருண்னு போச்சு... ஏற்கனவே அன்பர்கள் உன்னோட மொக்கை தாங்க முடியாம ஜூஸ் பாட்டில்கள் குடிச்சுகிட்டே இருக்காங்க... இப்போ இது வேறயா???) சரி விடுங்க....நம்ம கலாச்சார விஷயத்துக்கு போவோம்.... பழைய கலாச்சாரம்... புதிய (நவீன) கலாச்சாரம்.... பழையதை எதிர்த்து புதியதாக உருவாக்கினால் புதிய கலாச்சாரமா??? அல்லது பழையது அலுத்து புதிதாக வந்ததால் புதிய கலாச்சாரமா???... ஏதோ ஒன்று....

சில அடிப்படை விஷயங்களை இப்போது தெளிவு படுத்தி கொள்வது நல்லது....

அந்த காலத்து பெரியோர்கள் (பெரியார் அல்ல பெரியோர்) சொன்ன பழக்க வழக்கங்களை மூட பழக்க வழக்கங்கள் என்று ஒதுக்கி வைக்கும் மனப்பாங்கு... ம்ம்ம்ம்... கலாச்சாரத்திற்கும் இதற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.... அறிவியலின் துணை கொண்டு நாம் சில விஷயங்களை தீர்மானித்து இருக்கிறோம்...அதன் வரையில் நமக்கு இடைஞ்சல் தராத சில பழைய பழக்க வழக்கங்களை ஏற்று கொள்கிறோம்... நம்மால் அனுமானிக்க முடியாத விஷயங்களை மட்டும் மூட பழக்க வழக்கங்கள் என்று சொல்லி நியாயம் கற்பிப்பவர்கள் இங்கு ஏராளம்....நமக்கு தெரிய வில்லை என்ற ஒரு சப்பாணி காரணத்துக்காக அந்த பழக்க வழக்கங்கள் தவறு என்று எப்படி சொல்ல முடியும்???? நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுகிட்டு அதுக்கு நடுவில் சம்மணம் போட்டு உக்கார்ந்து கொண்டு.... நமக்கு ஒத்து வந்தால் ஒகே... இல்லை என்றால் அது வேஸ்ட் என்று சொல்லி கொண்டு இருக்கும் கூட்டம் இங்க கொஞ்சம் அதிகம்...

அதற்க்காக பழைய பழக்க வழக்கங்களை கொண்டாடி எல்லாவற்றையும் பின்பற்ற சொல்ல வர வில்லை... மதிப்பு கொடுங்கள்.... மூட பழக்க வழக்கங்கள் என்று சொல்லி எள்ளி நகையடாதீர்கள்......எளிதாக சொல்ல வேண்டும் என்றால்.... முதுமைக்கு இளமை புரியும்... ஆனால் இளமைக்கு தான் முதுமை புரியாது...(புரிய வேண்டிய அவசியமும் இல்லை.. ஹி... ஹி....)

உடை.... உணவு....இருப்பிடம்...தினசரி வேலைகள்...பொழுது போக்கு அம்சங்கள்...இப்போதைய வாழ்க்கை முறையை காட்டிலும், பழைய முறை நல்லா இருக்காது என்று சொன்னால் நாம் எல்லாரும் பல வகையில் துரதிர்ஷ்டசாலிகளே....(காரணம்??? அது தெரிஞ்சா நான் எதுக்கு இங்க வந்து உங்ககிட்ட மொக்கைய போட போறேன்... ஹி ஹி...)

முந்தி the Gods Must be Crazy 1&2 ஆங்கில படங்கள் பார்த்தேன்... நகைச்சுவை படங்கள்...நல்லா இருக்கும்... நெறைய பேரு பார்த்து இருப்பீங்க...ம்ம்ம்ம்... அந்த படத்தின் முதல் பாகத்தில் வரும் வசனங்கள் அருமையாக இருக்கும்...பாக்காதவங்க நேரம் இருக்கும் போது பாருங்க......

நம்மகிட்ட இருக்கிற முக்கியமான பிரச்சனை.... நம்ம வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு பாக்காம குறை சொல்லி விட்டு... பக்கத்து வீட்டு சாப்பாடு சூப்பர் என்று சொல்லுவது... அதற்க்காக பக்கத்து வீட்டு சாப்பாடு மோசம் என்று சொல்ல வர வில்லை... நம்ம சாப்பாட்டை முதலில் ரசிச்சு சாப்பிடுவோம்... அதுக்குள்ளே என்ன அவசரம்???

அப்புறம்..பப்.. பாரு.. பீரு... மோரு-னு ஏதோ ஏதோ சொல்றாங்க... முன்பும் கள்ளு, பட்டை சாராயம் எல்லாம் இருந்தது....

ஆனா நமக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் இல்லை... நெறைய முரண்பாடு உண்டு..... என்னோட தாத்தாவோட அப்பா... எங்க தாத்தா... என்னோட அப்பா... எங்க பெரியப்பா.... அப்புறம் நான்... எங்களுக்கு தண்ணி அடிக்கிற பழக்கமும் இல்லை... புகை விடுற பழக்கமும் இல்லை.... இதை நான் போற இடமெல்லாம் பெருமையா சொல்லி கொள்வேன்.... ஆனா உண்மை என்ன என்றால்... நான் தான் பெருமையா சொல்லுவேன்... ஆனா என்னை சுத்தி இருக்கிறவங்க.... பண்ற நக்கல்... கிண்டல்... ஐயோ... அதை விட சண்டை....

இப்படி தான்..... ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னோட கல்லூரியில் படிச்சவன் ஆமாம் கிளாஸ் மேட்.. இங்கு வந்து இருந்தான்... அவன் அபுதாபி-ல வொர்க் பண்றான்...வேலை விஷயமா வந்தவன்... இந்த ஊரை கொஞ்சம் சுத்தி காட்டுடா என்று சொன்னான்.... வாடா-னு கூப்பிட்டு போனேன்.... எல்லாம் சுத்தி பார்த்த அப்புறம்... வாடா பெல்லி டான்ஸ் போகலாம்-னு சொல்றான்... நான் அதுக்கு அய்யா ராசா...நமக்கு ரூம் விட்டா ஆபீஸ்... அதுவும் விட்டா லுலு..இது போக என்னோட வாழ்க்கையே ஒரு டான்ஸ் மாதிரி இருக்கு.... இதுல பெல்லி வேறயா??? போடா ரூமுக்கு-னு சொன்னேன்... உடனே சரி வேண்டாம்... பார் ஆச்சு வா என்று கையை பிடிச்சு இழுக்க.... நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல... அப்புறம் அவன் கூப்பிட... எனக்கு கோவம் வந்து அவனை அறைய... ரோடு-ல போறவங்க எல்லாரும் எங்களை பாக்க.... அவன் உடனே ரொம்ப பீல் பண்ண.... அவனை சமாதானப்படுத்தி அனுப்பி.... மறு நாள் சொன்னான்...

காலேஜ்-ல பார்த்த மாதிரி தான் இருக்க... இன்னும் வளரவே இல்லை என்று கோவமா சொல்ல... நான் அதுக்கு ஏற்கனவே நான் ஆறடி இருக்கேன்... இதுல இன்னும் வளரணுமா என்று கிண்டலாக கேக்க......

ஒரு கம்பெனி கொடுக்க வரல... நீ எல்லாம் ஒரு மனுசனா என்று கேக்குறான்....ம்ம்ம்ம்...நான் அதுக்கு என்ன பண்ண முடியும் எனக்கு பிடிக்கல....என்று சொல்லி விட்டு நிறுத்தி கொண்டேன்.....

இந்த விஷயம் தெரியாம.... கம்பெனி பார்ட்டி என்று போற இடங்களிலும் இதே கூத்து தான்.... நீங்க ரொம்ப யோக்கியமோ-னு சொல்லி குத்தி காட்டுற ஆளுங்களும் இருக்காங்க... உடம்புக்கு கெடுதல் வராம பார்த்துக்கறீங்க என்று சொல்லுகிற ஆளுங்களும் இருக்காங்க....

தண்ணி அடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்லை.... தண்ணி அடிக்காதவன் எல்லாம் உத்தமனும் இல்லை.... என்று விதண்ட வாதம் பண்ற ஆளுங்க தான் இங்க ஜாஸ்தி..... பலர் குளிர்க்கு என்று சொல்கிறார்கள்... பலர் உடம்புக்கு கெடுதல் என்று சொல்கிறார்கள்.... பலர் பிடிச்சு இருந்தா குடிக்கலாம்... பிடிக்கா விட்டால் வேண்டாம் என்று சொல்கிறார்கள்....மன கட்டுப்பாடு இருந்தால் குடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்...

ஆனால் என் வரையில்.... சந்தோஷத்தை இயல்பு நிலையில் அனுபவிக்க தெரியாதவர்கள்...துக்கத்தை இயல்பு நிலையில் பார்க்க திராணி இல்லாதவர்கள் தான் குடி மகன்கள்.... (இதை எல்லாம் நான் பிளாக்-ல போட்டா ஒரு பய படிக்க வர மாட்டான்... நமக்கு தான் அறுசுவை அன்பர்கள் இருக்காங்களே....எவ்வளவு மொக்கைய போட்டாலும் விடாம ஜூஸ் குடிச்சு படிக்குறதுக்கு... டேய் அருண்னு கலக்குற போ...ஹி ஹி..)

சரி.... கலாச்சாரம் என்று சொல்லி எங்கேயோ போய்ட்டோம்...

ம்ம்ம்ம்.... ஆடைகள் விஷயத்தில்.... சம கால ஆடைகள் வசதியாக நன்றாக இருக்கிறது என்று சொல்லுகிறோம்... ஆனால் இப்போது இருக்கும் உடைகளை இன்னும் நூறு வருடங்கள் கழித்து அப்போது உள்ள தலை முறையினர் கண்டிப்பாக குறை சொல்லுவர்.... அய்யா கண்ணதாசன் அவர்கள் சொன்னது மாதிரி மாற்றம் ஒன்றே மாறாதது.... நமக்கு இது பழகி போச்சு.... அதனால் அப்படி தோன்றுகிறது.... அவ்வளவே.....

திருமணம்...குழந்தை வளர்ப்பு முறை...நமது பண்பாடு.... இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு.... நாம் எப்படி இருக்க விரும்புகிறோம் என்ற புள்ளியை மட்டுமே சுற்றி வந்து... சூழ் நிலை கைதி என்று நமக்கு நாமே பட்டம் கொடுத்து கொள்கிறோம்... இதுவும் வருந்த தக்கது தான்...

மொத்தத்தில் என்ன தான் சொல்லணும்.... உங்களுக்கு தெரியாததா???

கலாச்சாரம் பழையதோ புதியதோ.... சீரும் சிறப்புமாக இல்லா விட்டாலும்...கலாச்சார சீர் கேடு அடையாமல் பார்த்து கொள்வது நமது பொறுப்பு.....(அதான் இப்போ நடக்குதே என்று சொல்லி நம்மை நாமே முடக்கி கொள்ள வேண்டாம்.... காலம் இருக்கிறது... இதுவும் மாறும்...)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

//நமக்கு தான் அறுசுவை அன்பர்கள் இருக்காங்களே....எவ்வளவு மொக்கைய போட்டாலும் விடாம ஜூஸ் குடிச்சு படிக்குறதுக்கு...//

அட என்னப்பா இது எனக்கு இனி ஜூஸ் குடிக்கும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் வர போகுது,,கொஞ்ச நாளா ஆரஞ்சு ஜூஸே குடிக்கமா இருந்தேன்,,இப்போல்லாம் கையில ஜூஸ் இல்லாம உங்க பதிவு பார்க்கிறதே இல்ல..மொக்கையிலும் மொக்கை அருமை(வை)யான மொக்கைதான் போங்க..

நீங்க எழுதினது எவ்வளவுதான் மொக்கையா இருந்தாலும் எனக்கு பிடித்ததில் சில...

*சந்தோஷத்தை இயல்பு நிலையில் அனுபவிக்க தெரியாதவர்கள்...துக்கத்தை இயல்பு நிலையில் பார்க்க திராணி இல்லாதவர்கள் தான் குடி மகன்கள்....

*நம்ம சாப்பாட்டை முதலில் ரசிச்சு சாப்பிடுவோம்... அதுக்குள்ளே என்ன அவசரம்???

*திருமணம்...குழந்தை வளர்ப்பு முறை...நமது பண்பாடு.... இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு.... நாம் எப்படி இருக்க விரும்புகிறோம் என்ற புள்ளியை மட்டுமே சுற்றி வந்து... சூழ் நிலை கைதி என்று நமக்கு நாமே பட்டம் கொடுத்து கொள்கிறோம்... இதுவும் வருந்த தக்கது தான்...

(வருந்த தக்கதாக இருந்தாலும் உண்மைய எப்பவுமே ஏத்துக்கொள்ளனும்,,ஏன்னா எப்பவுமே நம்ம எல்லோரும் ஏதாவது ஒரு சூழ்நிலைக்கு கைதிதான்)

*கலாச்சாரம் பழையதோ புதியதோ.... சீரும் சிறப்புமாக இல்லா விட்டாலும்...கலாச்சார சீர் கேடு அடையாமல் பார்த்து கொள்வது நமது பொறுப்பு.....

(நீங்க சொல்றது என்ன பொருத்தவரைக்கும் 100% சரிதான் இந்த விசயத்தில,,நாம நம்மல கலாச்சாரத்தோட வாழ பழகினால் நம்ம போல நினைக்கிறத இன்னொரு 10 பேர் சேர்ந்தால் அதுவே மாற்றத்துக்கு அறிகுறிதான்)

என்ன பொருத்தவரையும் நான் என் வீட்டு சாப்பாடுதான் விரும்புறேன்,,பழைய கலாச்சாரம் எனக்கு பிடிச்சிருக்கு,திரும்பி போகனும்னு தான் நினைக்கிறேன்..ஆனா இப்போ இருக்கிற வாழ்க்கை முறைல சில விஷயங்கள செய்ய முடியல..(சூழ்நிலை கைதிதான்)

சரி உங்க பிளாக்கில இருக்கிற குட்டி குழந்தை யாரு?அது அருண் தான் சொல்லி இன்னொரு ஜீஸ் கிளாஸ் கையில எடுக்க வச்சிறாதீங்க,ஏன்னா குழந்தை அழகா இருக்கு!!! சத்தியமா நீங்க இல்லையே?

ஆரம்பம் முதல் முடிவு வரை படித்து விட்டு நானும் ஜூஸ் குடித்தேன்.இப்ப எழுத்தின் தாகம் புரியுதா?புரிந்திருக்கனும்.
கலாச்சாரம் பழையதோ புதியதோ.... சீரும் சிறப்புமாக இல்லா விட்டாலும்...கலாச்சார சீர் கேடு அடையாமல் பார்த்து கொள்வது நமது பொறுப்பு.....(அதான் இப்போ நடக்குதே என்று சொல்லி நம்மை நாமே முடக்கி கொள்ள வேண்டாம்.... காலம் இருக்கிறது... இதுவும் மாறும்...)-- அருமை.இது ஒன்றே போதும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்ன தாமரைச்செல்வி பத்தாம் & பன்னிரெண்டாம் வகுப்பு பதிவில் பதில் மொழி போட்டு விட்டனே... ம்ம்ம் சரி... நேரம் இருக்கும் போது படிங்க... சரி அறுவையான மொக்கையா??? இல்லை இல்லை... அருமையான மொக்கை... என்னமோ ஒண்ணு... நல்லா இருந்தா சரி.....

ஜூஸ் குடிச்சா என்னோட நியாபகமா??? வந்து விடுமா???? அப்போ இன்னும் நெறைய பிரசங்கத்தை போட்டு உங்களை அடிக்கடி ஜூஸ் குடிக்க வச்சுடுறேன்... அப்போ தானே உங்கள் உடல் நலம் இன்னும் நல்லா இருக்கும்... (இப்போ நீங்களும் ஒரு சூழ்நிலை கைதி... என்னோட மொக்கை பிரசங்கம் எல்லாம் கேக்கணும் என்று... ஹி ஹி..)

சோ தாமரைச்செல்வி-க்கு பிடித்த மாதிரி சில சொல்லி இருக்கேனா??? நல்லது....

சரி பிளாக் பார்த்து விட்டீங்களா??? அந்த குழந்தை அழகா இருக்கா??? அப்படியா... நிஜமாவா??? அந்த குழந்தை எங்க அப்பாவோட.... அம்மாவோட... அவங்க தங்கச்சியோட....மருமகனோட....ஒண்ணு விட்ட சித்தப்பாவோட...அத்தை பொண்ணோட.... மருமகளோட குழந்தை....நல்லா இருக்கிறாங்களா??? (சத்தியமா நான் இல்லை... நான் தான் அதற்க்கு கீழே என்னோட படம் வச்சு இருக்கேனே...வேண்டும் என்றால் என்னோட இப்போது இருக்கும் படத்தை எதற்கு வச்சேன் என்று சொல்லவா??? ஐயோ தாமரைச்செல்வி எங்கே போய்ட்டீங்க? போச்சு...ஹி ஹி...) சரி அப்புறம் வாங்க.... நல்லது...

வாங்க ஆசியா... வந்தனம்... என்ன பையன் நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டாரா?? சரி.... எழுத்தின் தாகம்...இதை எங்கேயோ படிச்சு இருக்கேன்.. ஐயோ நீங்க தான் என்னோட பிளாக்-ல கமெண்ட் போட்டீங்களா?? உங்க எழுத்தில் தாகம் ஒரு வேகம் இருக்கு என்று.... அது சரி... ம்ம்ம்ம்... சரி அப்புறம் வெள்ளிகிழமை மதியம் எப்போ என்ன ரெடி பண்றீங்க??? கொஞ்சம் கொடுத்து விடுங்க...கண்டிப்பா உங்களுக்கு இருக்கிற அனுபவத்துக்கு சமையலில் சூப்பர் ஸ்டார் தான் நீங்க... அப்படி தானே... சரி ஆசியா... சமையல் முடிச்சு விட்டு நேரம் இருக்கிற அப்போ பதில் போடுங்க... நல்லது.... மீண்டும் பாக்கலாம்...

மேலும் சில பதிவுகள்