வாழ்த்து அட்டை செய்முறை - 7

தேதி: March 6, 2009

5
Average: 4.7 (3 votes)

இந்த வாழ்த்து அட்டைகள் பேப்பர் எம்பிரொய்டரி முறையில் செய்யப்பட்டவை. செய்வதற்கு மிகவும் சுலபமானவை. ஜியோமெட்ரிக் உருவங்கள் செய்வது இன்னும் சுலபம். இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

வெறும் வாழ்த்து மட்டை & உறை
வர்ண கடுதாசி
பசை/கோந்து
கத்தரிக்கோல்
ரிப்பன்
தையல் ஊசி
வர்ண நூல்கள்
மவுஸ் பேட் அல்லது ஃபோம் ஷீட்

 

வாழ்த்து அட்டை செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் ஒரு கடுதாசியில் ஒரு பூவின் படத்தை வரையவும். பின்னர் ஒவ்வொரு இதழிலும் மேல் மற்றும் கீழ் புறத்தில் இரண்டு புள்ளிகள் போடவும் பின்னர் இரு புள்ளிகளுக்கும் இடையில் இரண்டு பக்கமும் சம அளவிலான புள்ளிகள் போடவும். இதே போல இலைகளை கீறி அவற்றிற்கும் புள்ளிகள் போடவும்.
பின்னர் ஒரு மவுஸ் பேட்டில் அல்லது ஃபோம் ஷீட்டில் வாழ்த்து அட்டையை வைத்து அதன் மேல் தேவையான இடங்களில் இந்த பூவை வைத்து குண்டூசியால் புள்ளிகளின் மேல் அழுத்தமாக குற்றவும்.
பின்னர் வர்ண நூலால் பூவிதழின் மேல் கீழ் துளையினூடாக தைத்து பின் தொடர்ந்து படத்தில் காட்டியவாறு தைக்கவும்.
இவ்வாறு அனைத்து இதழ்களையும் போட்டுக் கொள்ளவும்.
அதன் பின்னர் அனைத்து பூக்களையும் போடவும்
பிறகு இலைகளையும் பூவின் நடுவே நட்சத்திர வடிவிலும் தைக்கவும்
இதன் உள் பக்கம் இவ்வாறு இருக்கும்
பின்னர் பூக்கொடியை பென்சிலால் வரையவும் அல்லது தைக்கவும்.
அதன் பிறகு வாழ்த்து அட்டையின் உள் பக்கத்தில் பிடித்த வர்ண காகிதத்தை வைத்து ஒட்டி விரும்பிய வாசகம் பொரிக்கவும்.
இவ்வாறு பிடித்த உருவங்களை வாழ்த்து அட்டையில் தைத்துக் கொள்ளலாம்.
இந்த உருவங்களையே ஒரு தடித்த பலகையில் வைத்து புள்ளிகள் உள்ள இடத்தில் சிறிய ஆணிகளை அடித்து அந்த ஆணிகளில் நூலச் சுற்றி எடுத்தும் செய்து சுவரில் மாட்டும் வால் ஹங்கர் செய்யலாம். இதை string art அல்லது symmography என்பார்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நர்மதா மேடம் அட்டகாசமாக உள்ளது.Wow!!

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மிகவும் அருமை..அந்த கடைசியிலிருந்து இரண்டாவது செய்த கார்ட் ரொம்ப க்லாஸ் லுக்கா இருக்கு..சூப்பர்

அனைத்துமே வெகு அழகாக இருக்கின்றன நர்மதா. :-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றாக இருக்கு. எனக்கு அந்த ஹார்ட் கார்ட் ரொம்ப பிடித்து இருக்கு.

உங்களுடைய கை வேலை மிகவும் அருமை, ரொம்ப பொறுமை வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நர்மதா,
வர்ண நூல்களால் ஆக்கப்பட்ட வாழ்த்து அட்டை மிக அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
செபா.

நர்மதா,

நான் இந்த hand work ஐ weekend try பண்ணினேன். ரொம்ப அழகா வந்தது. இன்னும் complete பண்ணல்ல. இதே design ஐ தான் செய்தேன். very beautiful. I love handworks. Thanks for this great idea.

Lalitha

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta