காலிஃப்ளவர் பொரியல்

தேதி: March 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

காலிஃப்ளவர் - 400 கிராம்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - 40 கிராம்
மிளகாய்தூள் - அரை மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி
எலுமிச்சம்புளி - 2 தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை பெரிய அளவிலான பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
4 மேசைக்கரண்டி தண்ணீரில் கொடுக்கப்பட்டிருக்கும் உப்பின் அளவில் பாதியை கரைத்து காலிஃப்ளவரில் தெளித்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து மூடி முழுசூட்டில் 5 நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதங்க விடவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் கடுகு, சோம்பு, கடலைபருப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கியதும் அதனுடன் மிளகாய்தூளை சேர்த்து வதக்கி விடவும்.
இந்த மசாலா கலவையில் காலிஃப்ளவரை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
காலிஃபிளவரை சேர்த்து பிரட்டியதும் 75 மி.லி சூடான தண்ணீரை ஊற்றி மீதமிருக்கும் உப்பை போட்டு மூடி வைத்து வேக விடவும்.
காலிஃப்ளவரில் நீர் வற்றி வெந்ததும் இறக்கி வைத்து தேசிக்காய் பிழிந்து நன்கு பிரட்டி விடவும்.
சுவையான காலிஃப்ளவர் பொரியல் தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் திருமதி. தளிகா அவர்களின் குறிப்பினை பார்த்து சில மாற்றங்களுடன் செய்த காலிஃப்ளவர் பொரியல் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிரா,
காலி ப்ளவர் பொரியல் நல்ல சுவை. இது போல இன்னும் பல பதிவுகள் போடுங்கள். நன்றி.
செபா.

ஹாய் அதிரா
இந்த குறிப்பை பாக்க மிஸ் பன்னிட்டேன் கீழ பாத்தப்ப தான் என் குறிப்பில் மாற்றம் செய்தது என்று இருந்தது..ரொம்ப சந்தோஷமா இருக்கு..

நன்றாகவே இருந்தது.

god is my sheperd

மிக்க நன்றி
செபா, தளிகா, பெல்ஷியா அனைவருக்கும் மிக்க நன்றி. இன்றுதான் நான் இதைப் பார்க்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்