பொட்டுகடலை சட்னி

தேதி: March 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பொட்டுக்கடலை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2 - 3
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 6


 

சின்ன வெங்காயம் தோல் உரித்து பொடியாக நறுக்கவும்.
மிக்ஸியில் பொட்டுக்கடலை, தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும்.
இதோ சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.
இதனை இட்லி, தோசை, பொங்கலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மைதிலி,
பொட்டுகடலை சட்னி மிகவும் சூப்பர்..நான் இதுவரை பொட்டுகடலை சட்னியில் சின்ன வெங்காயம் சேர்த்து செய்த்தில்லை..வித்தியசமாக நன்றாக இருந்த்து…தோசையுடன் சாப்பிட சுவையாக இருந்த்து. குறிப்பு தந்த்தற்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

சட்னி சுவையாக நன்றாக இருந்தது.
செல்வி

சவுதி செல்வி

ஹாய் கீதா எப்படி இருக்கீங்க?நான் எந்த சட்னி பண்ணாலும் சின்ன வெங்காயம் தான் சேர்ப்பேன் கீதா அப்பதான் ருசியாக இருக்கும்.பின்னூட்டம் அனுப்பியதற்கு
மிகவும் நன்றி பா.

ஹாய் செல்வி எப்படி இருக்கீங்க? மிகவும் நன்றி
பின்னூட்டம் அனுப்பியதற்கு பா.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

நானும் இதே மாதிரிதான் செய்வேன்.தோசைக்கு சூப்பர்,நன்றி மைதிலி!!

அருமை,டேஸ்ட் சூப்பர்.இன்னும் நீங்க வீட்டில் செய்யும் நிறைய ரெசிப்பி கொடுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மைதிலி நானும் பொட்டு கடலை சட்னி செய்தேன் டேஸ்ட் ரொம்ப நல்ல இருந்தது

மேனகா நலமா? மிகவும் நன்றி பின்னூட்டம் அனுப்பியதற்கு.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

ஆசியாக்கா மிகவும் நன்றி.கண்டிப்பா இன்னும் நிறைய ரெசிப்பி கொடுக்கிறேன்
மிகவும் நன்றி பின்னூட்டம் அனுப்பியதற்கு.

ஹாய் jasi எப்படி இருக்கீங்க? மிகவும் நன்றி பின்னூட்டம் அனுப்பியதற்கு.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

அன்பு மைதிலி,
நான் வெங்காயம் சேர்ப்பேன். இஞ்சி டேஸ்ட் எனக்கு பிடிக்காதுன்னு எப்பவும் சேர்க்க மாட்டேன். எங்கம்மா, பாட்டி எல்லாம் சேர்ப்பாங்க. நேற்று உனது குறிப்பை செய்யணும்கிறதுக்காக இஞ்சி சேர்த்தேன். அவருக்கு மிகவும் பிடித்தது. நானும் பாட்டியின் ஞாபகத்தில் சாப்பிட்டேன். நன்றி.
மைதிலிக்கு எந்த ஊர்? நிறைய எங்க ஊர் சமையல் போல் இருக்கு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு செல்வி அக்கா,
அப்படியா?எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் காரணமாக பாட்டி ஞாபகம்
வந்ததை கேட்டு மிக்க மகிழ்ச்சி.என் சமையல் எல்லாம் என் அம்மாவின் கை வண்ணம் தான் அக்கா. என் ஊர் சென்னை தான் இப்போ நான் இருக்கிற ஊர் அயர்லாந்து. நீங்கள் எந்த ஊர் அக்கா. பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி

Mb

பொட்டுகடலை சட்னி தோசையுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் மைதிலி இன்னிக்கு உங்க பொட்டுக்கடலைச் சட்னி செய்தேன். நன்றாக இருந்தது. நான் எப்போதும் பூண்டு சேர்த்துதான் பொட்டுக்கடலைச்சட்னி செய்வேன். சின்னவெங்காயம் சேர்த்து வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது. நன்றி மைதிலி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!