ஓட்டுமா

தேதி: March 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

அரிசிமாவு - 4 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
முட்டை - 2
தேங்காய் - 2


 

இடியாப்பத்திற்கு தேவையான அரிசிமாவை எடுத்துக்கொள்ளவும்.
தேங்காயைத்துருவி அரைத்து கெட்டியாக பால் எடுத்துக்கொள்ளவும். முதல் பால் மட்டும் போதும். பிறகு பிழியப்படும் பாலை மற்ற சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
முட்டையை நன்கு அடித்துக்கலக்கவும். இதில் தேங்காய்ப்பாலை கலந்து பிசறவும். புட்டுமாவு பதத்தில் இருக்கவேண்டும்.
அடிக்கனமான வாணலியை அடுப்பில் வைத்து பிசறிய மாவை சேர்த்து வறுக்கவும். கொஞ்சம் கொஞ்சமா நெய் சேர்த்து வறுக்கவும்.
ஓரளவு வறுபட்டதும் சர்க்கரை சேர்த்து வறுக்கவும். கரகரப்பாக வறுபட்டதும் இறக்கி விடவும்.
நன்கு ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு மாதமானாலும் கெடாது.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஒட்டுமா ரெசிப்பி பார்த்தேன்,நாங்க கொஞ்சம் வேற மாதிரி மொத்தமாக செய்வோம்,கொஞ்ச அளவு எனக்கு சரியாகவும் தெரியாது.அப்புறம் வறுத்து ஆறிய மாவில் தானே சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து வைப்போம்.சர்க்கரையை சேர்த்து வறுக்க சொல்லி இருக்கீங்களே.அப்படி தான் உங்கள் பக்கம் செய்வீர்களா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆமாம் ஆஸியா.எங்கள் பக்கம் இப்படித்தான் செய்வோம்.ஆறிய மாவில் சர்க்கரையைசேர்த்தால் சர்க்கரை தனியாகத்தெரியும்.சிலர் அனைத்தையும் இன்னும் சற்று அதிக தேங்காய்ப்பால் சேர்த்து கெட்டியாக கரைத்து வறுப்பார்கள்.இன்னும் அதிக நேரம் பிடிக்கும்.எங்கள் ஊரில் இதை சில வீடுகளில் செய்து விற்பனையும் செய்கின்றார்கள்.ஒரு முறை ஊருக்கு போய் இருந்த பொழுது வாங்கி வந்து ஒரு தெலுகு நண்பி வீட்டுக்கு போய் இருந்த பொழுது கொடுத்தேன்.பாலித்தீன் கவரை எடுத்துப்பாத்தவர் "என்னது மணல் மாதிரி இருக்கு"என்று கிண்டல் செய்தார்.சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள் என்று விட்டு வந்தேன்.இப்போதெல்லாம் நான் ஊருக்குப்போகும் பொழுதெல்லாம் "ஸாதிகா ஓட்டுமா மறக்காமல் வாங்கி வா"என்பார்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த ஓட்டுமா நான் ஹாஸ்டலில் படிக்கும் போது என் ப்ரண்ட்ஸ் கொடுத்துள்ளனர். இதன் செய்முறை படித்தது மிக்க மகிழ்ச்சி - nisha

நிஷா

இந்த ஓட்டுமா உங்களுக்கு மலரும் நினைவுகளை தூண்டி விட்டது பலே..பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி நிஷா.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த ஓட்டுமா மிகமிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி துஷ்யந்தி.இலங்கையிலும் செய்வீர்கள்தானே?முடிந்தால் அந்த முறையினை குறிப்பாக கொடுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகாஅக்கா நாங்கள் இலங்கையில் ஒட்டுமாவை முட்டைமா என்று அழைப்போம்.உங்கள் விருப்பப்படி நான் இலங்கையில் ஒட்டுமா(முட்டைமா)செய்யும் முறையை எனது குறிப்பில் எழுதிவிட்டேன் நீங்கள் விரும்பினாள் இலங்கையில் ஒட்டுமாவை(முட்டை மா) செய்யும் முறையை பார்த்து அதனை பற்றி எழுதவும் http://www.arusuvai.com/tamil/node/12697

இப்படிக்கு
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"