மட்டன் கோஃப்தா

தேதி: March 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலும்பில்லாத ஆட்டிறைச்சி - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
மல்லித்தழை - சிறிது
உப்பு - சுவைக்கு
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

மட்டனை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், மல்லித்தழை, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் உப்பு, கரம் மசாலா சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
விரும்பிய வடிவில் ஷேப் செய்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் பொரித்து எடுக்கவும். சாஸுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சாதிகா அக்கா மட்டனை வேகவைக்க தேவையில்லையா? எண்ணையில் பொரித்தால் மட்டன் வெந்துவிடுமா? நீங்கள் பதில் கொடுத்ததும் செய்து பார்க்கிறேன்.

மட்டனை வேக வைக்கத்தேவை இல்லை.வேகவைத்தால் டேஸ்ட்டே மாறி விடும்.அடுப்பை சிம்மில் வைத்தே வேக விடவும்.நன்கு வெந்து விடும்.நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website