விக்கட் விங்ஸ் (பேக்ட்)

தேதி: March 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இந்த விக்கட் விங்ஸ் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

சிக்கன் விங்ஸ் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
ஹாட் சாஸ் - 1 - 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
பப்ரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 - 3 தேக்கரண்டி


 

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் விங்ஸை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கழுவி வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் துண்டுகளை சுத்தமாக கழுவிய பின்னர் தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் விங்ஸை எடுத்துக் கொண்டு அதனுடன் சில்லி பவுடர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, ஹாட் சாஸ், சோயா சாஸ், பப்ரிக்கா பவுடர், கார்ன் ஃப்ளார், 2 தேக்கரண்டி எண்ணெய் எல்லாவற்றையும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிரட்டி 1 - 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நாண்ஸ்டிக் பேக்கிங் ட்ரேயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் தடவி அதில் சிக்கன் விங்ஸை அடுக்கி வைக்கவும்.
அதன் பின்னர் முற்சூடு செய்து வைத்திருக்கும் கேஸ் அவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து அவனை 180 - 200 டிகிரியில் வைக்கவும்.
10 - 15 நிமிடம் வரை வைத்திருந்து வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான விக்கட் விங்ஸ் தயார். இது சாஃப்டாக ருசியாக இருக்கும். இதனை பன், கார்லிக் சாஸ், சாலட் லீவ்ஸ் ஆகியவற்றுடன் பரிமாறலாம். இந்த சிக்கனை பொரிப்பதை விட பேக் செய்து எடுத்தால் தான் அதிக சுவையாக இருக்கும். இதன் ருசி, வாய் போதும் என்று சொன்னாலும் மனம் வேண்டும் என்று தான் சொல்லும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு. நாம எல்லோரும் லூலூ புட்கோர்ட்டில் சாப்பிட்டோமே அந்த விங்ஸ்தானே இது. அதே மாதிரியே ப்ரெசண்ட் பண்ணியிருக்கீங்க. க்ரேட். அப்புறம் விங்ஸ் மட்டும் தனியே கிடைக்குதா. எங்கே வாங்கினீங்க. உங்களோட பேவரைட் ரெசிப்பி இது. எங்க எல்லோருக்கும் பிடிச்சமாதிரி ஆக்கிடீங்க அன்னைக்கு. அடுத்த வாரத்தில் சீக்கிரமே செய்து பார்ப்பேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

என்ன ஆசியா உங்கள் வீட்டில் எல்லோரும் சிக்கன் விங்ஸ் பிரியரா?

//எங்க வீட்டில் எல்லோரும் சிக்கன் லாலிபாப் பிரியர்கள்?//

பேக் செய்து சாப்பிட்டால் ம்ம் குப்பூஸ், கார்லிக் சாஸுடன் என்னையில்லாமல் இருக்கேன் எவ்வள்வு நாலும் அழுத்தலாம்.

ஜலீலா

Jaleelakamal

ஆஹா,பார்க்கவே உடனே செய்து விடவேண்டும் போல் உள்ளது.உங்கள் பேக்ட் விக்கட் விங்க்ஸ் ,பேக் பண்ணிய பிறகு நல்ல சிகப்பு நிறமாக உள்ளதே?கலர் பவுடர் சேர்த்தீர்களா?அல்லது காஷ்மீரி மிளகாயா?கேஸ் அவனில்தான் வைக்க வேண்டுமா?எலெக்ட்ரிக் அவனில்(ஓ டி ஜி)யில் வைக்கக்கூடாதா?சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்க மூவரின் பின்னூட்டம் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.நன்றி.
ஸாதிகா,கலர் உபயோகிககலை,காஷ்மீரி சில்லி பவுடர் கலர் தான்,கிட்சனில் வெளீச்சம் குறைவு,அதனால் டார்க்காக தெரியுது.ப்ரெசெண்ட் பண்ணியது ஹாலில்,அதனால் ஒரிஜினல் அப்படியே இருக்கு.இது cooking range உள்ள ஓவனில் செய்தது.எல்லா ஓவனிலும் செய்யலாம்.
தனிஷா,carrefour,fresh wings வாங்கி வந்தது.லாலிபாப் தனியாக அந்த விளிம்பு பகுதி தனியாக கட் பண்ணனும்.இதேமசாலா try பண்ணுங்க.
ஜலீலா,சமையல் ராணியான தாங்களே பாராட்டியது மிக்க மகிழ்ச்சி.என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாவ் சூப்பர் ஆசியாக்கா.நானும் இதே போல் தொடையில் செய்வேன்.இந்த சமயத்தில் எல்லோரும் நான் வெஜ் குறிப்பா குடுத்து என்னை வெறுப்பேத்தஈங்க எல்லோரும்.ம்ம்ம்ம்ம்ம்ம் பெருமேச்சு விடுறேன்.

மேனகா நலமா ?நான் வெஜ் நானும் குறைத்து விட்டேன்,அது தான் நல்லது,பிள்ளகளுக்கு செய்து கொடுக்கனும் தானே,அதற்கு தான் இதுப்பா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா,
பேக்ட் சிக்கன் செய்வது மிகவும் சுலபம். நல்ல சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
செபா.

ஆசியா மேடம் இந்த ரெசிப்பி ரொம்ப நன்றாக இருக்கிறது.சிம்ப்பிளாகவும் இருக்கு. நீங்க இவ்வளவு சுப்பரா சமைக்கிறீங்க.........உங்க குறிப்பு எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.

நன்றி
உமா.

உமா ,ஆமாம் ரொம்ப ஈசி செய்தால் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.எல்லா நேரமும் மேக் விங்ஸ்,பிட்சா ஹட் போய் சாப்பிடாமல் ஒரூ மாற்றுக்கு வீட்டிலும் செய்து சாப்பிடலாமே.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்க பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி.உங்களைப் போல பெரியவர்கள் அறுசுவையில் இருப்பது மிகப்பெருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.