மணிகளால் ஆன முடி(crown) - பொதுவான கைவினை - அறுசுவை கைவினை


மணிகளால் ஆன முடி(crown)

திங்கள், 09/03/2009 - 13:39
Difficulty level : Medium
4.8
5 votes
Your rating: None

 

  • முத்து - 6 மி.மீ அளவிலான முத்துக்கள்
  • கம்பி
  • குரடு

 

மணி முடி செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முடியின் அளவை விட 6 செ.மீ அதிகமாக ஒரு துண்டும், இரண்டாவது துண்டு அதுபோல் 2 மடங்கு வருமாறும் கம்பியை வெட்டிக் கொள்ளவும்.

இரண்டு கம்பிகளையும் ஒன்றாகப் பிடித்து ஒரு முத்தினுள் நுழைத்துக் கொள்ளவும். கம்பிகள் இரண்டையும் முத்தைச் சுற்றி வளைத்து விடவும்.

சிறிய கம்பியில் 6 முத்துக்களும், நீளமான கம்பியில் 9 முத்துக்களும் கோர்த்துக் கொள்ளவும்

முத்துக்களை நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு நீளமான கம்பியால் சிறிய கம்பியை இறுக்கமாக 2 சுற்றுச் சுற்றி விடவும்.

இதேப்போல் தொடர்ந்து தேவையான அளவு நீளம் வரும் வரை முத்துக்களைக் கோர்த்துக் கட்டவும்.

கடைசி முறை கம்பியைச் சுற்றியதும் ஆரம்பத்தில் செய்தது போல் இரண்டு கம்பிகளையும் சேர்த்து ஒரு முத்தினுள் நுழைக்கவும்.

தொடங்குகிற போது வளைத்துவிட்ட கம்பி வளையத்தினூடாகச் செலுத்தி ஒற்றை முத்தைச் சுற்றி வளைத்து விடவும்.

மேலதிகமான கம்பித் துண்டுகளை வெட்டிவிட்டு வளைவுகளைச் சீர்செய்துவிடவும்.

தலைக்கு அணிவிக்கும் போது ஒற்றை மணிகள் வரும் இடத்தைப் பின் புறம் வருமாறு வைக்க வேண்டும். வளைவு இடைவெளிகளில் ஹேர்பின் கொண்டு சொருகி விட வேண்டும். இங்கு பயன்படுத்தியுள்ளவை பல்கோண அமைப்புள்ள, மல்டிகலர்ட் முத்துக்கள்.

இந்த அழகிய மணிகளால் ஆன முடியை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. செபா அவர்கள். 73 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. கைவேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இந்த முடி 1969 ஆம் ஆண்டு தனது மகளின் முதல் நன்மைக்காகச் செய்தது. அதை இப்போது நினைவுப்படுத்தி நமக்காக செய்து அனுப்பியுள்ளார்
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..ஹாய் செபா மேடம், crown super

செபா மேடம் இந்த க்ரெளன் ரொம்ப அழகா இருக்கு, அதை செய்து காண்பித்த மெத்தட் கூட ரொம்ப எளிதா இருக்கும் போல? செய்து பார்த்துட்டு சொல்றேன் மேடம்.

seba aunty,

ஒவ்வொரு தடவையும் என் மகள் க்ரவுன் கேட்கும் பொழுதெல்லாம் தேடி தேடி வாங்கி கொடுத்தோம்,இனிமேல் அழகாக வித விதமா கலர் கலராக செய்து கொடுக்கலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கிரீடம்

கிரீடம்

அப்பா கொள்ளை அழகு.
செபா ஆன்டி சூப்பர் அப்ப உள்ளதை நினைவு படுத்தி இப்ப போட்டுள்ளீர்கள்.
நல்ல பிரெஸென்டேஷன் கொடுத்து இருக்கீங்கள்.
வாழ்த்துக்கள்.

ஜலீலா

Jaleelakamal

வாவ்!!!

seba aunty!!! i am going to make one for myself.. afterall I deserve one too!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

செபா ஆன்டி

செபா ஆன்டி,
மிகவும் அருமை..உங்களை நான் சின்ன பொன்னு என்று நினைத்து இருந்தேன்..ஆனால் உண்மையில் நீங்கள் இளமை தான்…எவ்வள்வு நாள் ஆனபிறகும் அதனை மறக்காமல் இருந்து எங்களுக்காக செய்து காட்டி உள்ளீர்…நன்றிகள் பல.
போட்டோஸ் மிகவும் சூப்பர்…
அன்புடன்,
கீதா ஆச்சல்

செபா மேடம்!!

கீரிடம் ரொம்ப அழகா இருக்கு.அப்போ செய்ததை நினைவுபடுத்தி போட்டிருக்கிங்க.செய்வதற்க்கும் ரொம்ப ஈஸியா இருக்குது.

செபா மேடம் சூப்பர்!!

மேடம் க்ரவுன் ரொம்ப அழகா இருக்கு.என்னுடைய மகளுக்காக இதை செய்து பார்த்து சொல்கிறேன்.
செல்வி

சவுதி செல்வி

ஹலோ காயத்ரி,

உங்கள் பாராட்டுக்கு எனது நன்றி.
அன்புடன்,
செபா.

ஹலோ ஆசியா,

பின்னூட்டத்திற்கு எனது நன்றி. உங்கள் மகளுக்கு எத்தனை வயது? முடி செய்து மகளுக்கு அணியுங்கள். அழகாக இருப்பார்.
அன்புள்ள,
செபா.

ஜலீலா

வாழ்த்துக்களுக்கு நன்றி. அந்த நாட்களில் நிறையப் பொருட்கள் செய்துள்ளேன். இப்போ ஞாபகப்படுத்துவது தான். சிரமமாயுள்ளது.
அன்புடன்,
செபா.